அம்பாசமுத்திரம்! பொது வேட்பாளராக சீமானை நிறுத்தினால் விஜய்க்கு ஈஸி! ஆனால் உதயநிதிக்கு கஷ்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் தவெக நிச்சயம் வெல்லும்! அதே நேரம் சீமானை முன்னிலைப்படுத்தினால் அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்" என பத்திரிகையாளர் சாமிநாதன் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறை சேனலுக்கு அவர் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக போட்டியிட சீமான் விரும்புகிறார். இதனால்தான் தன்னை வேட்பாளராக அவர் அறிவித்துக் கொண்டார்.

seeman tvk ambasamudhram

சீமான் தன்னை பொது வேட்பாளராக நிலைநிறுத்த வேண்டும் என ஆழமாக நம்புகிறார். தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு இடைத்தேர்தல்களில் தனித்தனியாக அரசியல் கட்சிகள் போட்டியிட்ட போதும் தவெகவால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பெற முடியவில்லை. தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என விஜய் நரேட்டிவ் செட் செய்தது, நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் திமுக இரண்டாவது இடத்திற்கு முன்னேற உதவியது.

சீமானுக்கு லாபம்

பொது வேட்பாளராக சீமானை அறிவித்தால் சில அரசியல் லாபங்கள் இருக்கின்றன. அதிமுக, திமுக என தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தாலும் அவர்களை காட்டிலும் சட்டசபையில் சீமான் நன்றாக செயல்படக் கூடியவர். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு, சீமான் வெற்றி பெற்றால் யாருடைய ஓட்டில் வெற்றி பெற்றார்? அதிமுக ஓட்டா, திமுக ஓட்டா? எல்லா கட்சியினரும் சேர்ந்த ஓட்டா? என்ற ஒரு கேள்வியை எழுப்பும்.

விஜய் பிரச்சாரம்

திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான் என விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார். தற்போது திமுக, அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்து கொண்டார்கள் என்று விஜய்யோ அல்லது தவெகவினரோ பிரச்சாரம் செய்வர். சீமான் பொது வேட்பாளர் என்பதை அவர்தான் விரும்புகிறார். ஆனால் திராவிடக் கட்சிகள் விரும்புமா என்பதை பார்க்க வேண்டும். அம்பாசமுத்திரத்தில் அதிமுக 4 முறை வெற்றி பெற்ற தொகுதி.

திமுகவுக்கு அடித்தளம் இருக்கு

அது போல் அந்த தொகுதியில் திமுகவுக்கும் வலுவான அடித்தளம் இருக்கிறது. சீமான் இந்த தொகுதியை ஏன் விரும்புகிறார் என்றால் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதகவுக்கு 7.74 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. விஜய் அலையால் கடந்த 2026 சட்டசபை பொதுத் தேர்தலில் நாதகவின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி 4 சதவீதமாக குறைந்த போதிலும் கூட அம்பாசமுத்திரத்தில், 2021-ஐ போல் 7.8 சதவீதம் வாக்கு சதவீதத்தை நாதக எடுத்திருந்தது. எனவே தனது அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டும் என சீமான் நினைக்கிறார்.

7.8 சதவீதம் பெற்ற நாதக

7.8 சதவீதம் வாக்குகளை பெற்ற நாதக, மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வென்றாலும் தோற்றாலும் அது சீமானுக்கு லாபம். பொது வேட்பாளராக போட்டியிட்டு சீமான் வெற்றி பெற்றால், திமுகவுக்கு கூடுதல் எதிரியாக சீமான் இருப்பார். சட்டசபையில் சீமான், திமுகவுடன் தோழமை உணர்வுடன் இருப்பாரா இல்லையா என்பது வேறு, ஆனால் விஜய்க்கு போட்டியாக சீமானை உருவாக்கிவிடுவதுதானே!

வியூகம் என்ன?

பொது எதிரியாக தவெகவை முன் வைத்து பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற வியூகம் தாராபுரம் ,மதுராந்தகம் தொகுதிகளுக்கு எடுபட்டிருக்கும். ஏனென்றால் இசக்கி சுப்பையாவுடன் ஒப்பிட்டால் சத்தியபாமாவும், மரகதம் குமரவேலும் நட்சத்திர வேட்பாளர்கள் அல்ல!

இசக்கி சுப்பையாவுக்கு செல்வாக்கு அதிகம்

ஆனால் இசக்கி சுப்பையாவுக்கு தொகுதிக்குள் தனி செல்வாக்கு இருக்கிறது. இனி இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளுமே விஐபி தொகுதிகள்! இசக்கி சுப்பையா 15 ஆண்டுகளாக தொகுதியை தக்க வைத்தவர். அம்பையில் இசக்கி சுப்பையாவுக்கென 15- 18 சதவீதம் வரை தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.

14 சதவீதம் வாக்குகள் இழப்பு

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பை தொகுதியில் அதிமுக 14 சதவீத வாக்குகளை தவெகவிடம் இழந்திருந்தாலும் வெற்றி பெற்றது. திமுக 9 சதவீதம் வாக்குகளை மட்டுமே இழந்திருக்கிறது. 14 சதவீத வாக்குகளை இழந்த பிறகும் அதிமுக எப்படி வென்றது என்றால் இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட செல்வாக்கு!

இந்த தனிப்பட்ட செல்வாக்கை முறியடிக்க, எல்லா கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளராக சீமானை இறக்கினால், கடந்த காலங்களில் திமுக, அதிமுக, பாஜக குறித்து சீமான் விமர்சித்ததெல்லாம் ரீல்ஸ்ஸாக பரப்புரையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இஸ்லாமியர்கள் வாக்கு

அம்பை தொகுதியில் 9 சதவீதம் இஸ்லாமியர்களின் வாக்கு இருக்கிறது. "சங்கி என்றால் நண்பன்" என்று அர்த்தம் என சீமான் விளக்கம் அளித்திருந்தார். அந்த வீடியோவை கட் செய்து தவெகவினர் ரீல்ஸ் போடுவார்களே! எனவே சீமான் போன்ற ஒருவரை பொது வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதில் பல முரண்கள் உள்ளன.

தவெகவுக்கு பலம்

நட்சத்திர தொகுதிகளுக்கு பொது வேட்பாளரை நிறுத்தினால் தவெகவுக்கு பலமாகும். ஏனென்றால் அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற விமர்சனங்கள் உண்மையாகிவிடும். இசக்கி சுப்பையா பிரச்சாரம் செய்வது எளிதாகிவிடும். அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால்தான் அதிமுகவை விட்டு வெளியேறியதாக இசக்கி சுப்பையா கூறியது உண்மை என்றாகிவிடும். இது திமுகவை மேலும் பலவீனப்படுத்தும். மேலும் சட்டசபைக்கு சீமான் நுழைந்து அவர் பேச தொடங்கினால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் புகழ் மங்கும். தவெக ஆட்சிக்கு வந்து இதுவரை நடந்த சட்டசபை கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி என்ன பேசுவார்?, என்ன பதிலடியை கொடுப்பார்?, பிரஸ் மீட்டில் என்ன பேசுவார்? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதை சீமான் ஓவர்டேக் செய்துவிடுவார். இது உதயநிதிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+