பாஜக - அதிமுக கூட்டணியில் தவெக விஜய் சேர்ந்தால் யாருக்கு வெற்றி? அப்போ திமுக? சதவிகிதம் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

Tamilaga vetri kazhagam vijay

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக வெற்றிக்கழகம் வருகிறதா?

அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயைத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அதிமுக தேர்தலை அணுகுகிறது. அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும். அந்த நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், திமுகவை வீழ்த்த தவெக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜக தரப்பிலும் விஜய்-ஐ கூட்டணிக்கு வரவேற்று இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

2026 சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கட்சிகள் 2021 தேர்தல் வென்ற வாக்கு சதவிகிதம்

திராவிட முன்னேற்றக் கழகம் - வாங்கிய வாக்குகள் - 1,74,30,179 - வாக்கு சதவிகிதம் - 37.70 போட்டியிட்ட இடங்கள் - 188 - வென்ற இடங்கள் - 133
இந்திய தேசிய காங்கிரஸ் - வாங்கிய வாக்குகள் - 19,76,527 - வாக்கு சதவிகிதம் - 4.27 - போட்டியிட்ட இடங்கள் -25 - வென்ற இடங்கள் - 18
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வாங்கிய வாக்குகள் - 5,04,537 - வாக்கு சதவிகிதம் - 1.09 - போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 2
விடுதலை சிறுத்தைகள் கட்சி - வாங்கிய வாக்குகள் - 4,57,763 - வாக்கு சதவிகிதம் - 0.99 - போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - வாங்கிய வாக்குகள் - 3,90,819- வாக்கு சதவிகிதம் - 0.85 -போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - வாங்கிய வாக்குகள் - 2,22,263- வாக்கு சதவிகிதம் - 0.48- போட்டியிட்ட இடங்கள் - 3 - வென்ற இடங்கள் - 0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - வாங்கிய வாக்குகள் - 1,53,91,055 - வாக்கு சதவிகிதம் - 33.29 - போட்டியிட்ட இடங்கள் -191 - வென்ற இடங்கள் - 66
பாட்டாளி மக்கள் கட்சி - வாங்கிய வாக்குகள் - 17,58,774 - வாக்கு சதவிகிதம் - 3.80 - போட்டியிட்ட இடங்கள் - 23 - வென்ற இடங்கள் - 5
பாரதிய ஜனதா கட்சி - வாங்கிய வாக்குகள் - 12,13,670 - வாக்கு சதவிகிதம் - 2.62 -போட்டியிட்ட இடங்கள் - 20 - வென்ற இடங்கள் - 4

நாம் தமிழர் கட்சி - வாங்கிய வாக்குகள் - 30,42,307 - வாக்கு சதவிகிதம் - 6.58 - போட்டியிட்ட இடங்கள் -234 - வென்ற இடங்கள் - 0

மொத்தமாக கூட்டணி அளவில் வென்ற வாக்கு சதவிகிதம்

திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்ற வாக்குகள் 2,09,82,088 வென்ற வாக்கு சதவிகிதம் 45.38%
பாஜக அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற வாக்குகள் 1,83,63,499 வென்ற வாக்கு சதவிகிதம் 39.71%
நாம் தமிழர் கட்சி வென்ற வாக்குகள் 30,42,307 வென்ற வாக்கு சதவிகிதம் 6.58%

விஜய் சேர்ந்தால் வாக்கு சதவிகிதம் என்னவாக இருக்கும்?

விஜய் இந்த கூட்டணியில் இணையும் பட்சத்தில்.. விஜய்க்கு வாக்கு சதவிகிதம் 10-12 ஆக இருக்கும் பட்சத்தில்.. அதிமுக - பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தல் அளவிலேயே குறையாமல் இருந்தால் மொத்தமாக கூட்டணியின் சதவிகிதம் 51 சதவிகிதம் ஆக உயரலாம்.

அதாவது திமுக கூட்டணியின் அதே 45 சதவிகிதம் வாக்குகள் அளவை விட அதிகமாக அதிமுக - பாஜக - தவெக கூட்டணியின் வாக்குகளும் உயரலாம். இதனால் அதிமுக கூட்டணி வெற்றி அல்லது கடுமையான போட்டி உருவாகும் வாய்ப்புகள் கூட உள்ளன.

ஆனால் இது கூட விஜய்க்கு வாக்கு சதவிகிதம் 10-12 ஆக இருக்கும் பட்சத்தில்.. அதிமுக - பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தல் அளவிலேயே குறையாமல் இருக்க வேண்டும்.. அதோடு திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் குறையாமல் இருக்க வேண்டும். இதனால் விஜய் எடுக்கும் வாக்கு சதவிகிதம் மட்டுமன்றி அதிமுக மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதையும் பொறுத்தே முடிவுகள் மாறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+