ஜூலை 27ம் தேதி கடைசி நாள்... இதை செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து? பறந்த மெசேஜ்
சென்னை: சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை வரும் ஜூலை 27ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் ஏஜென்சி எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இலவச கேஸ் இணைப்பை பெற்றுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 372 ரூபாயும், மற்றவர்களுக்கு 47 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு 500 ரூபாய்க்கும் சிலிண்டர் வழங்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தில் இணையாத மற்றவர்களுக்கு 800 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் இரண்டு வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
அதன்படி பாரத் கேஸ், இண்டேன், ஐஓசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் கேஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக கேஒய்சி பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்துவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று செல்போன் செயலி மூலம் முகப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேஸ் ஏஜென்சிகள் அறிவித்திருந்தன. கடந்த மே 30ஆம்தேதிக்குள் ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்தாகும் என செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் ஜூலை 27ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை இணைக்கவில்லை என்றால், வரும் ஜூலை 27ம் தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.. இல்லாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications