அம்மா கேன்டீன் இருக்கும்போது.. "உங்களுடன் ஸ்டாலின்" இருக்கக்கூடாதா? சென்னை ஐகோர்ட்டில் திமுக வாதம்
சென்னை: அரசுத் திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வில்சன், மத்திய அரசு சார்பில் நமோ மற்றும் முந்தைய ஆட்சியில் அம்மா திட்டம் எனத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் பெயரை மட்டும் பயன்படுத்த ஏன் கூடாது என்ற வாதத்தை முன்வைத்தார். இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் & சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக தனித்தனியே பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம் பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படமும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்படமும் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் அரசின் திட்டத்தை ஒரு தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அரசியல் காரணங்களுக்காக அரசு பணம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கும் கருணாநிதி புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கருணாநிதி புகைப்படம் பயன்படுவது வழிமுறைகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தன்னார்வலர்கள் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், திமுகவினரே அதிகளவில் இருப்பதாகவும் இதைத் தேர்தல் பரப்புரை போலச் செய்வதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவி சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "முதல்வரின் முகவரி துறை சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுகிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. ஏற்கனவே இந்த திட்டம் முதலமைச்சர் என்ற பெயரில் இருந்த நிலையில், இப்போது திடீரென உங்களுடன் ஸ்டாலின் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர் சின்னங்கள் இடம்பெறக்கூடாது. இந்த திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணத்தில் செய்யப்படும் திட்டத்தின் விளம்பரத்தில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.. மேலும், ஆகஸ்ட் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் தொடங்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கும் ஸ்டாலின் பெயர் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அரசு விளம்பரம் இல்லை
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "அரசுத் திட்ட விளம்பரங்களில் முதலமைச்சர் படம் மட்டுமல்ல.. துறை அமைச்சர்களின் படங்களைப் பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம் அரசு விளம்பரம் அல்ல" என்று தெரிவித்தார்.
நமோ, அம்மா திட்டம்
இந்த வழக்கில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார் மேலும், ஏற்கனவே கடந்த ஆட்சியில் அம்மா கேன்டீன், அம்மா திட்டம் எனத் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயரில் நமோ என்ற திட்டத்தைத் தொடங்கியதையும் சுட்டிக்காட்டினார். அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, முதல்வரின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, இது குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம், திமுக பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரும் ஆகஸ்ட் 2ல் தொடங்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கும் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications