நான் முதல்வரானால் கச்சத்தீவை மத்திய அரசு மீட்காவிட்டால் தனித் தமிழ்நாடு கேட்பேன்.. சொல்வது சீமான்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வென்று நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் போது, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு மறுத்தால் தனித் தமிழ்நாடு கேட்போம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மேலும் மீனவர்களுக்கான தனி நெய்தல் படை அமைத்து மீனவர்களுக்கு வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கொடுத்து சிங்களரை கொலை செய்ய சொல்வோம் என்றும் சீமான் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்கு தரவே கூடாது என பேசிய ஒரே ஒருவர் மூக்கையா தேவர்தான். 1961-ம் ஆண்டு கச்சத்தீவு குறித்து பேசிய நேரு, இந்த சின்ன தீவின் பெயரில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்கிறார். ஏனெனில் நேருவின் அப்பன் சொத்து பாருங்க கச்சத்தீவு..ஏய் சில சமயம் நானா பேசும் போது நம்பமாட்ட.. அதனால்தான் எடுத்து படிக்கிறேன். நான் பார்த்து படிக்கிற பழக்கம் இல்லாதவன்.இதை நீ பார்க்க வேண்டும் என படிக்கிறேன்.

நேரு மேலும் சொல்கிறார், இந்த சின்ன தீவின் (கச்சத்தீவு) பேரில் எனக்கு விருப்பமும் இல்லை; அதன் மீதான உரிமையை விட்டுக் கொடுப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்கிறார். ஏனெனில் கச்சத்தீவுக்கும் நேருவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி குறித்த ஆவணங்களில், 1973-ல் கொழும்பில் இந்தியா- இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்பே, அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது; இலங்கையுடனான பேச்சுவார்த்தையின் சாரம் அனைத்தும் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது என இடம் பெற்றுள்ளது. அத்துடன், இந்தியா- இலங்கை அரசுகள் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவை தருவதாகவும் தமிழ்நாட்டில் எழும் சூழ்நிலைகளை அனுசரித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க இயலாது என்றும் தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான எதிர்ப்பு தீவிரமடையாமல் பார்த்துக் கொள்வதாகவும் கருணாநிதி உறுதி அளித்தார் என்கின்றன ஆவணங்கள். இவர்கள்தான் கச்சத்தீவை மீட்கப் போகிறார்கள் என நம்புகிறீர்களா?
நல்ல போதையில் கூட எனக்கு ஓட்டுப் போட்டுவிட்டு நீங்கள் படுத்துவிடுங்கள். என்னை ஒரு முறை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துதான் பாரடா.. அப்போது நாங்கள் சட்டசபையில், தமிழச்சிகளின் தாலியை அறுத்தவன் தலையை அறுப்பதுதான் மானத் தமிழரின் மரபு. என்னை தாண்டி சிங்களன் நண்பன் என்றால் அவனையே வைத்து கொள்.. என்னை விட்டுவிடு.. கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி.. இல்லை எனில் என்னை பிரித்துவிடு என தீர்மானம் நிறைவேற்றுவோம். கேரளா மீனவனைத் தொட அஞ்சுவதைப் போல தமிழ்நாட்டு மீனவனைத் தொட பயப்பட வைப்போம்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி அமையும் போது நெய்தல் படை அமைத்து மீனவர்களிடம் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கொடுத்து அனுப்புவோம்; ஒவ்வொரு மீன்பிடி படகுக்கும் பாதுகாப்புக்காக துணைப் படகும் செல்லும்; அப்படி செல்லும் போது சிங்களவன் நம்மை தொடுவான் என நினைத்துவிட்டாலே அவனை தூக்க சொல்லி உத்தரவிடுவோம். இதனால் சர்வதேச கடல் பிரச்சனையாக வரும். அப்போது நம்மிடம் பேச வருவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications