சிவக்க சிவக்க மருதாணி போட்டிருக்கீங்களா? அப்ப நாளைக்கு ஓட்டுப்போட முடியாதா? இதென்ன புதுஸா பரபரப்பு
சென்னை: மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்க மாட்டாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.. என்ன நடந்தது? இது உண்மையா?
நாளை காலை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது.. வாக்காளா் அடையாள அட்டை உள்பட வாக்காளரை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே வாக்களிக்க முடியாது. பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிப்பது சாத்தியமாகும்.

தேர்தல் ஆணையம்: இதற்கு தோ்தல் ஆணையத்தின் வெப்சைட்டை பாா்வையிட்டால் போதும்... அதில், உங்களது வாக்காளா் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளா் பெயா் மற்றும் தொகுதி அல்லது செல்போன் நம்பரை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்குச்சாவடியில் காண்பிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அட்டையை அளிக்க முடியாத வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.
மருதாணி: இப்படிப்பட்ட சூழலில், மருதாணி, அல்லது மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்க மாட்டாது என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது, மிகுந்த பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டது. ஆனால், உரிய விளக்கத்தை தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பண்டிகைகள், கொண்டாட்டங்களின்போது பெண்கள் மெகந்தி அல்லது மருதாணி போட்டுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.. வடமாநிலங்களில் மெகந்தி வைப்பதற்கென்றே தனிசடங்குகள் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.. சில சமூகங்களில் ஆண்களும் மருதாணி வைத்து கொள்வார்கள்..
மெகந்தி: இப்படிப்பட்ட சூழலில், மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற தகவல் கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது..
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல வாக்காளர்களுக்கும் இந்த தகவல் பரவியதால் பதறிப்போய்விட்டனர்.. அதனால், நாளை ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காகவே, ரசாயனங்களை கொண்டு கைகளிலுள்ள மருதாணியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட துவங்கிவிட்டனர்.
விளக்கம்: ஆனால், சோஷியல் மீடியாவில் பரவி வரும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று, சென்னை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்றும்கூறி, பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications