தினமும் 50 ரூபாய் சேமித்தால் Retirement-க்கு ₹25 லட்சமா? போஸ்ட் ஆபீஸின் மேஜிக் இதோ! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: நம்மில் நிறைய பேருக்கு ஒரு தவறான எண்ணம் இருக்கிறது, அதாவது பெரிய அளவில் பணம் சேமிக்க வேண்டும் என்றால் நம்மிடம் லட்சக்கணக்கில் முதலீடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.. ஆனால் நிஜமாகவே அப்படி கிடையாது.. ஜஸ்ட் 50 ரூபாய் கூட உங்களை வளம்மிக்கும் நபராக மாற்றும் சக்தி கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் கூட்டு வட்டி சீக்ரெட்.
பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்குபோஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.. இதில் மிகச் சிறிய தொகையை தொடர்ந்து சேமித்து வந்தாலும், ஓய்வு காலத்தில், கையில் ஒரு மிகப்பெரிய நிதி சுதந்திரம் இருக்கும்..

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
தினமும் ₹50 என்றால், ஒரு மாதத்திற்கு வெறும் ₹1,500 மட்டுமே சேமித்தால் போதும்.. இந்த பணத்தை போஸ்ட் ஆபீஸில் உள்ள பிபிஎஃப் (PPF) அல்லது தொடர் வைப்பு நிதி (RD) போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்..
இப்போது பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.. இந்தத் திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து, பிறகு அதை மேலும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீட்டித்தால், கூட்டு வட்டி முறையில் உங்கள் பணம் மின்னல் வேகத்தில் வளரும்..
அதுமட்டுமல்ல, நீங்கள் முதலீடு செய்யும் அசல் தொகையை விட, உங்களுக்கு கிடைக்கும் வட்டித்தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும்.. 25 ஆண்டுகால முடிவில், வெறும் 50 ரூபாய் சேமிப்பு உங்களை ₹25 லட்சம் வரை ஈட்டித் தரும் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் அந்தப் பெரிய ரகசியம்..
தினமும் ரூ.50 சேமிப்பு போதும்
சிலர், 20 அல்லது 30 வயதிலேயே இந்த சேமிப்பை தொடங்காமல் விட்டுவிட்டு, 50 வயதிற்கு மேல் வருத்தப்படுவார்கள்.. "அப்போவே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்திருக்கலாம்" என்றும் ஆதங்கப்படுவார்கள்.. அப்படியெல்லாம் வருத்தம் உங்களுக்கு வரக்கூடாது என்றால், இன்றே ஒரு உண்டியலையோ அல்லது வங்கி கணக்கையோ இதற்காகவே ஒதுக்கிவிட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் திட்டம் கிடையாது என்பதால், இந்த சிறிய சேமிப்புதான் அவர்களுக்கு பிற்காலத்தில் கைகொடுக்கும்.. மேலும், போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், உங்கள் பணத்திற்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களை பார்த்து பயப்பட தேவையில்லை..
வரிச்சலுகை, லாபம்
இந்த திட்டத்தில் இன்னொரு ஸ்பெஷல், உங்களுக்கு வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.. நீங்கள் ஈட்டும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இது முழுமையான லாபத்தைக் கொடுக்கும்..
ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளி முதல் பெரிய நிறுவன ஊழியர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த ₹50 சேமிப்பை எளிதாகச் செய்ய முடியும்.. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு, பிற்கால நல்வாழ்விற்காக திட்டமிடுபவர்களுக்கு இந்தப் போஸ்ட் ஆபீஸ் கணக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்.. உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ அல்லது உங்கள் மருத்துவத் தேவைக்கோ இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்..
இன்றே தொடங்குங்கள் சேமிப்பு
அதனால் காலம் கடந்து யோசிப்பதை விட இப்போதே களத்தில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம்.. அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று உங்கள் சேமிப்பைத் தொடங்குங்கள்.
ஒரு சிறிய ஆரம்பம்தான் ஒரு பெரிய இலக்கை அடைய உதவும்... 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் இருக்கும் அந்த ₹25 லட்சம், நீங்கள் இன்று எடுக்கும் இந்த ஒரு சிறிய முடிவின் பலனாகத்தான் இருக்கும்..!!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications