உங்கள் வீட்டு மின் கட்டணம் கடந்த மாதம் 1150 ரூபாய் எனில், அடுத்த மாதம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
சென்னை: மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு உயர்ந்து விட்டது. உங்கள் வீட்டிற்கு இனி எவ்வளவு கரண்ட் பில் வரும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கும். உதாரணமாக கடந்த மாதம் 1150 ரூபாய் கரண்ட் பில் எனில், இனி ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பிற்கு பின்னர் செப்டம்பர் முதல் வாரம் எவ்வளவு கட்ட வேண்டியதிருக்கும் தெரியுமா? இதை பாருங்கள்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயிக்கிறது. அந்த கட்டணத்தை மின்வாரியம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது.

இந்தநிலையில் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதன்படி இந்த புதிய மின் கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வந்திருக்கிறது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 400 யூனிட் வரை உள்ள வீட்டு பயன்பாடு மின்கட்டணம், இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 ஆக இருந்தது. தற்போது 20 பைசா உயர்ந்து, ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 30 பைசா உயர்ந்து, ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 40 பைசா உயர்ந்து, ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 ஆக இருந்தது. தற்போது 45 பைசா உயர்ந்து, ரூ.9.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து, ரூ.10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இதுவரை யூனிட்டுக்கு ரூ.11.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 55 பைசா உயர்ந்து, ரூ.11.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-ல் இருந்து ரூ.9.80 ஆக அதிகரித்துள்ளது. ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கான 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.70-ல் இருந்து ரூ.9.10 ஆக அதிகரித்துள்ளது.
விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக அதிகரித்துள்ளது. தொழில், ஐ டி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.12.25-ல் இருந்து ரூ.12.85 ஆக அதிகரித்துள்ளது.
சிலருக்கு கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் வந்திருக்கும். அதில் சிலருக்கு 1150 ரூபாய் கரண்ட் பில் வந்திருக்கும், சிலருக்கு 3000 ரூபாயும், சிலருக்கு 5000 ரூபாயும் கரண்ட் பில் வந்திருக்கும்.. அப்படி கரண்ட் பில் கட்டியவர்கள் , வரும் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பிற்கு பிறகு எவ்வளவு கரண்ட் பில் கட்ட வேண்டும் என்பதை பார்ப்போம்.
உதாரணம் 1 : இரண்டு மாதத்திற்கு 250 யூனிட் பயன்படுத்துறீங்க அப்படீன்னா, இதுவரை அதற்கு யூனிட் கட்டணமாக ரூ.4.60 பைசா இருந்திருக்கும். இரண்டு மாதத்திற்கான கரண்ட் பில் 1150 ரூபாய் கட்டியிருப்பீர்கள். ஆனால் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பிற்கு பின்னர், இதே 250 யூனிட்டிற்கு 1200 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும். அதாவது 50 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டியதிருக்கும். 200 யூனிட்டிற்குள் தான் மாதம் கரண்ட் பில் வரும் என்றால் பெரிய பாதிப்பு இருக்காது.
உதாரணம் 2 : இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்துறீங்க அப்படீன்னா, இதுவரை அதற்கு யூனிட் கட்டணமாக ரூ.6.15 பைசா இருந்திருக்கும். இரண்டு மாதத்திற்கான கரண்ட் பில் 3075 ரூபாய் கட்டியிருப்பீர்கள். ஆனால் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பிற்கு பின்னர், இதே 500 யூனிட்டிற்கு 3225 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும். அதாவது வழக்கமான கட்டணத்தைவிட 1175 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும்.
உதாரணம் 3: இரண்டு மாதத்திற்கு 1001 யூனிட் பயன்படுத்துறீங்க அப்படீன்னா, இதுவரை அதற்கு யூனிட் கட்டணமாக ரூ.11.25 பைசா இருந்திருக்கும். இரண்டு மாதத்திற்கான கரண்ட் பில் 11,261.25 ரூபாய் கட்டியிருப்பீர்கள். ஆனால் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பிற்கு பின்னர், இதே 1001 யூனிட்டிற்கு 11,861.85 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும். அதாவது வழக்கமான கட்டணத்தைவிட 600 ரூபாய் கூடுதலாக கட்ட வேண்டியதிருக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications