சென்னையில் உங்கள் நிலம் எந்த வகையை சேர்ந்தது.. வீடு கட்ட போகிறீர்களா.. இது உங்களுக்குத்தான்
சென்னை: சென்னையில் உங்கள் இடம் நீர்நிலைகளில் இருக்கிறது என்றால் தடையில்லா சான்று கிடைப்பது கடினம். நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் பட்டா வாங்கியவர்கள் வீடு கட்டுவது எளிதாக இருக்காது.. உங்கள் பகுதியில் இப்போது போய் விசாரித்து பாருங்கள். ஏனெனில் உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் வீடுகட்டுவதற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகரம் மிகப்பெரிய ஏரிகள் அதிகம் கொண்ட நகரமாக இருந்தது.சென்னை போல் தமிழ்நாட்டில் எந்த நகரமும் அசுரவளர்ச்சி அடையவில்லை. தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் சென்னையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு நகரம் வளர்ந்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சென்னை மாநகரத்தின் ஆரம்ப கால பகுதிகளில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அது நகரமயமாகவே இருந்தது. மழை நீர் வடிகால் வசதிகள், சாலை வசதிகள், மின்சார வசதிகள், கழிவு நீர் வசதிகள் என எல்லாமே சிறப்பாக இருந்தது.

ஆனால் 2000களில் ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த போது சென்னை மாநகரம் மற்றும் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது. வேளச்சேரியை சுற்றி உள்ள ஏரிப்பகுதிகள், தரமணி, பெருங்குடி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலை, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்தன. அதனை சுற்றி இருந்த ஏரி பகுதிகளும் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின.
சென்னையில் 1975 இல் எத்தனை இடங்கள் நத்தம் புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளாக இருந்தவை இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், காலி மனைகளாகவும், வீடுகளாகவும் மாறி உள்ளன என்பதை கணக்கிட்டால், உண்மையான நிலை தெரியும். சரி விஷயத்திற்கு வருவோம்.
சென்னை வீட்டு மனைகளின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு சென்றதால் பல பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்தார்கள். திருவள்ளூர் முதல் செங்கல்பட்டு வரை இந்த பக்கம் அக்கரை முதல் அந்த பக்கம் பொன்னேரி வரை சென்னை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
சென்னையில் பல நீர் நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறின. அதன் விளைவால் ஒழுக்கற்ற மழைநீர் இல்லாத நகர்பகுதிகளாக சென்னையின் புறநகர் பகுதிகள் உள்ளன. இதனை சரிசெய்ய ஏராளமான கோடிகள் தேவைப்படுகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் 2015ல் மோசமாக பாதித்த பிறகே நிலைமையை மக்கள் உணர்ந்தனர். அரசு கடிவாளத்தை இறுக்கியது. இதன் விளைவாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இப்போது யாருமே ஒரு சென்ட் இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது. அப்படி ஆக்கிரமிக்க முயன்றால் சிறைக்கு தான் போக வேண்டியதிருக்கும்.
சென்னையில் நீர் நிலைகளில் வீடு கட்டுவதை தடுக்க அரசு தற்போது தடையில்லா சான்று வழங்குவதை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் வழக்கு ஒன்றில் தான் தெரியவந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ்கட்டளையைச் சேர்ந்த பாதம் சந்த் ஜெயின் உள்ளிட்டோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் "பல்லாவரம் தாலுகா கீழ்கட்டளையில் எம்.கே.நகர் 1-வது தெருவில் எங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. இந்த இடம் ரயத்துவாரி புஞ்சை என கிராம பதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் எங்களது இடம் வருவாய் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என வகைப்படுத்தப்படுத்தி உள்ளார்கள். அத்துடன் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என கூறி கடந்த பிப்ரவரி 6-ந் தேதி அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள் . எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எங்களது நிலத்தை வீ்ட்டுமனை பகுதியாக மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பினை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், வருவாய் துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் கண்டறிந்து அவற்றை வரையறை செய்ய வேண்டும். வீட்டு மனைகளின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு சென்று விட்டதால் பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டு வைக்க மறுக்கிறார்கள்.

அரசு நிலங்களை சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக மாற்றி சொந்தம் கொண்டாடும் நிலையில், இதற்கு சில அதிகாரிகளும் துணை போகிறார்கள். எனவே, அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளும் எவ்வித விசாரணையும் இன்றி அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தடையில்லா சான்று கொடுப்பதை ஏற்க முடியாது. இதனிடையே தனக்கு சொந்தமானது என மனுதாரர் கூறுவதற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை அளிக்க இயலாது. எனவே, மாவட்ட கலெக்டர் இந்த நிலத்தை ஆய்வு செய்து நீர்நிலையாக இருந்தால் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அரசு புறம்போக்கு நிலங்களையும் கண்டறிந்து அவற்றை வரையறை செய்ய அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். அத்துடன் இனிமேல் ஏரி புறம்போக்கு பகுதிகளில் வீடு கட்டுவது சாத்தியமே இல்லை. உங்கள் நிலத்தின் பட்டா ஏரி புறம்போக்கில் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications