யுபிஎஸ்சி தேர்வு: கேட்டாங்க பாருங்க கேள்வி.. நீங்க என்ன பதில் சொல்வீங்க? ஐஎப்எஸ் அதிகாரியின் ட்வீட்
சென்னை: சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வியை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானா தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கேள்விக்கு அவர் அளித்த பதிலையும் குறிப்பிட்டு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்று பர்வீன் கஸ்வானா கேட்டு இருந்தார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது.
மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்.சி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு உள்ளது. இதற்காக படித்து முடித்தவுடன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படிப்பது, வீட்டில் இருந்தே தயாராவது என பல இளைஞர்கள், இளம்பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளை பொருத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை யுபிஎஸ்சி நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த கட்டமான முதன்மை தேர்வு நடைபெறும். அதன்பிறகு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்திய ஆட்சி பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பது அனைவருமே அறிந்ததுதான்.
யுபிஎஸ்சி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: அவ்வப்போது யுபிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெறும். பொதுவாக இந்த தேர்வுகளை பொருத்தவரை பல சாதுர்யமான கேள்விகளை கொண்டதாக இருக்கும். பார்ப்பதற்கு மிக எளிமையாக தெரிந்தாலும் மிகவும் ஆழ்ந்து யோசித்தால் நுணுக்கமான கேள்வியாகும் பொது விவகாரங்கள் அலசும் தன்மையை பரிசோதிப்பதாக அமையும்.
புத்தக அறிவை தாண்டி பல கேள்விகள் இருக்கும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வானா, இவர் தனது ட்விட்டரில் அடிக்கடி வன விலங்குகள் குறித்த வீடியோக்களையும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான பதிவுகளையும் பதிவிட்டு வரக்கூடியவர்.
நெட்டிசன்கள் மத்தியில் இவரது ட்விட்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இவர் அண்மையில் பதிவிட்ட ஒரு ட்வீட் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது தனது யுபிஎஸ்.சி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியை ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்து இருக்கிறார். பர்வீன் கஸ்வானா கூறியிருப்பதாவது:-
உங்களின் பதில் என்னவாக இருக்கும்?: எனது சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வில் இருந்த 3-வது குழு உறுப்பினர் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால், நாம்(இந்தியா) விண்வெளி திட்டத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடுகிறோம். அதேவேளையில் வறுமையும் நம்மிடம் உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலில், இயல்பாகவே இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட உகந்தது அல்ல என நான் நினைக்கிறேன். 1928 -ஆம் ஆண்டு சிவி ராமன் கடலின் நிறம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ராமன் விளைவு கண்டறியப்பட்டது. இது பின்னாளில் மருத்துவ அறிவியல் உள்பட பலதுறைகளுக்கும் உதவியது. ஆய்வுகள் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் மிகவும் பயனளிக்கக் கூடியது என்று பதிலளித்தேன்" என்றார். இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? எனக் கூறி இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், இந்த ட்விட்டை வெள்ளிக்கிழமை பகிர்ந்து இருந்தார்.

அப்போது முதல் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது இந்த ட்விட். நெட்டிசன்கள் பலரும் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், " நானாக இருந்தால் geo செயற்கை கோள் குறித்த எடுத்துக்காட்டை சொல்லியிருப்பேன். ஏனெனில், நமது வானிலை குறித்த மாற்றங்களை கண்டுபிடிக்க இந்த செயற்கை கோள்கள் உதவுகின்றன.
நெட்டிசன்கள் கருத்து: இந்தியாவில் பெருமளவு மக்கள் விவசாய பணிகளிலேயே உள்ளனர். அவர்கள் வானிலையையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "சில ஆய்வுத்துறையில் செலவை குறைப்பதால் வறுமையை ஒழித்து விட முடியாது. போதிய வருமானம் ஈட்டாததால் மக்கள் ஏழையாக இருக்கிறார்கள்.
திறனற்றவர்களாக இருப்பதால் அவர்கள் பணம் சம்பாதிக்க முடியவில்லை. நமது கல்வி முறையில் குறைபாடுகள் இருப்பதால் அவர்கள் திறனற்றவர்களாக இருக்கிறார்கள். அதைதான் நாம் சரி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இவ்வாறாக நெட்டிசன்கள் பலரும் சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பல்வேறு வகையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications