Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘பொம்பள பிள்ளைக்கு எதுக்கு படிப்பு’.. அரசு பள்ளி ஆசிரியை ஆன பெண்.. நெகிழ்ந்த ஐஎப்எஸ் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டே படித்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஒரு பெண், தனது சித்தப்பாவால், "பொம்பளைப் புள்ளைக்கு எதுக்குப் படிப்பு" என உதாசினப்படுத்தப்பட்டார். இன்று அவர் பட்ட மேற்படிப்பு படித்து அரசு பள்ளி ஆசிரியராக உயர்ந்துள்ளார். இதை பார்த்து நெகிழ்ந்த ஐஎப்எஸ் ஸ்ரீதரன் கல்வி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் வேலை பார்த்துக் கொண்டே படித்தவர்கள் ஒரு பக்கமும் மற்றும் அவர்களின் உறவினர்கள் மறு பக்கமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, சில மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டே வேலை செய்வதாக தெரிவித்தனர். பெற்றோரை இழந்து அக்காவையும் படிக்க வைத்து, தானும் ஆட்டோ ஓட்டி படித்து வரும் கல்லூரி மாணவன், அப்பா அம்மாவிற்காக மூட்டை தூக்கும் சிறுவன், அப்பா அம்மாவை இழந்து தாய் மாமா வளர்ப்பில் வளரும் சிறுவன் என பலரது வாழ்க்கை சூழலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

government school teacher

தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வியால் முன்னேறிய மற்றும் தொடர்ந்து முன்னேறி வரும் மாநிலம் ஆகும். 'எதை வேண்டுமானாலும் விட்டுவிடு.. ஆனால் படிப்பை மட்டும் விட்டுவிடாதே' என்று சொல்லி சொல்லியே ஊக்கப்படுத்தப்பட்ட மாநிலம் ஆகும். இந்தியாவில் உயர் கல்வி அதிகம் பயிலும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் எல்லா துறையையும் விட கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி இங்கு கிடைக்கிறது. அரசு பள்ளியில் படித்து, அரசு ஒதுக்கீட்டில் பொறியியல், மருத்துவம் சேருவோருக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இதேபோல் , ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவையும் அரசே ஏற்கிறது.

மேலும் அரசு பள்ளி, மாணவ மாணவிகள் உயர்கல்வி படித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு தருகிறது. இப்படி கல்விக்காக அரசு பல விஷயங்களை செய்து வருகிறது. ஆனால் அந்த காலத்தில் இந்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை.. எனினும் பலர் படித்தனர். படிப்பு தான் நம்மை அதிகாரத்திற்கு கொண்டு வரும். நம் வறுமையை போக்கும் என்று நம்பினார்கள். அப்படிவென்ற ஒரு பெண் ஆசிரியர் , நீயா நானாவில் பேசினார்.

government school teacher

அப்போது அவர் கூறும் போது, "எட்டாவதுல அப்பா இறந்துட்டாங்க. பத்தாவது முடித்துவிட்டு மேலே படிக்கவேண்டும் என்றபோது, "பொம்பளைப் புள்ளைக்கு எதுக்குப் படிப்பு?"ன்னு ஒரே வார்த்தைல முடிச்சிட்டாரு சித்தப்பா. என் அம்மா செய்யும் எல்லா வேலையையும் கூடவே போய் செய்வேன். தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போதெல்லாம், நாமளும் ஒரு நாள் இப்படி வேலைக்குப் போவோமா என்று தோன்றும்.
முதலில் தையல் வகுப்பு. அதைத் தொடர்ந்து, தட்டச்சு, பிறகு பட்டப்படிப்பு, பட்டமேல்படிப்பு முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பெற்று, இப்போது அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன்." என்று கூறினார். இதை பார்த்து நெகிழ்ந்த ஐஎப்எஸ் அதிகாரி ஸ்ரீதரன், கல்வி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+