கோமியம் குடித்தால் குணமாகும் காய்ச்சல்.. சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை
சென்னை: மாட்டின் சிறுநீரை குடிப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் மருத்துவத் துறை பல்வேறு பிரிவுகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும், உயர்தர சிகிச்சை முறைகளாலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி, மாட்டின் கோமியத்தை குடிப்பதன் மூலமாக உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி கோமியத்தில் உள்ளது. கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது இந்நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஒருமுறை சந்நியாசி ஒருவர் வந்தபோது நல்ல ஜுரம் அடித்துள்ளது. அப்போது, எனது தந்தை ஜுரம் அடிப்பதால் மருத்துவரிடம் செல்லலாமா என்று சந்நியாசியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கோ மூத்திரம் பிபாமி என்று கூறியுள்ளார். உடனடியாக பசுமாட்டு தொழுவத்தில் இருந்து கோமியம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைக் குடித்ததும் அடுத்த 15 நிமிடத்தில் ஜுரம் குணமாகியுள்ளது. காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு கோமியம் சிறந்த மருந்தாக உள்ளது.
மாட்டின் கோமியத்தை குடிப்பதன் மூலமாக உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி கோமியத்தில் உள்ளது. கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும் என்று பேசியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநரே கோமியம் குறித்து இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி நிறுவனரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications