‘கோமியம்’ குடித்தால் காய்ச்சல் குணமாகும் எனச் சொன்ன காமகோடி.. தேர்வு சீர்திருத்தக் குழுவில் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு சீர்திருத்தங்களுக்காக நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. இந்தக் குழுவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். மாட்டுக் கோமியம் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியவர் காமகோடி.

தற்போதைய தேர்வு முறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முழுமையான மற்றும் வெளிப்படையான சீர்திருத்தங்களைச் செய்வதற்காக நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

IIT Director Kamakoti Who Faced Cow Urine Row Named to Centre s Exam Reforms Committee

6 பேர் கொண்ட குழு

இந்தக் குழுவிற்கு ஆதார் திட்டத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி தலைமை தாங்குவார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்வித்துறை செயலர் அனிதா கர்வால், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த காமகோடி?

உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார் காமகோடி. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவர் இந்தப் பொறுப்பை வகித்து வருகிறார். கணினி பொறியியல் படித்து அதில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர் காமகோடி. சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் அத்துறையின் தலைவராகவும் உயர்ந்தார். தற்போது சென்னை ஐஐடியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'சக்தி' என்ற மைக்ரோபிராசஸரை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் டாக்டர். காமகோடி. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் காமகோடி மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராகச் செயல்பட்டவர்.

கோமியம் மருத்துவக் குணம் - சர்ச்சை

கடந்த 2025 ஆம் ஆண்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, "என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். அவர் எனது தந்தையை கோமியம் குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதை ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாக எந்த மருத்துவ அமைப்பும் அறிவிக்கவில்லை. கோமியத்தை உட்கொள்வதை அலோபதி மருத்துவம் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான சூழலில், ஐஐடி இயக்குநரே கோமியம் குடித்ததால் காய்ச்சல் சரியாகிவிட்டது எனப் பேசியது கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+