என்ன பெரிய அஜித் படம்..பெத்த புள்ளையே NOC வாங்கனும்! சோகத்துடன் வெளியேறிய யுவன்.. இளையராஜா ராக்ஸ்!
சென்னை: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்றுள்ள தான் இசை அமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இளையராஜா. இதை அடுத்து பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். மறுபுறம் அவரது இசைக்கு அவர் உரிய ராயல்டி கேட்பது தவறு இல்லை என ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில் மகனான தான் இளையராஜாவின் பாடல்களை உபயோகிப்பதாக இருந்தால் அவரிடம் என்ஓசி பெற வேண்டும் என யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விடாமுயற்சி தோல்வியால் விரக்தியில் இருந்த அஜித்குமார் ஆதிக் உடன் இணைந்த குட் பேட் அக்லி படத்தில் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது. அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாத நிலையில் இரண்டு மாதங்களில் இரண்டு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இந்த படத்தில் பல பழைய ஹிட் பாடல்கள் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா தாரேன் உள்ளிட்ட பாடல்கள் யூட்யூபில் ரசிகர்களால் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாகவும் இதனால் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அதில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். ஏழு நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரீமிக்ஸ் செய்து பயன்படுத்திய பாடலை நீக்க வேண்டும் என கூறியிருந்தார். இதை எடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு தயாரிப்பாளருக்கு இசையை விற்று விட்ட இளையராஜா எப்படி ராயல்டி கேட்க முடியும் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.
ஒருபுறம் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் மறுபுறம் இளையராஜாவுக்கு எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மைத்ரி மூவிஸ் யாரிடம் ராயல்டி பெற வேண்டுமோ அவர்களிடம் பெற்றாகிவிட்டது எனக் கூறியிருந்தது. அதாவது படத்தின் தயாரிப்பாளர்களிடம் என்ஓசி பெற்றதாக கூறியுள்ளது.
இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான வை ராஜா வை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்று இருந்த 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலை வைக்கலாம் என யோசித்துள்ளார்கள். ஆனால் யுவன் சங்கர் ராஜா அந்த பாடலை வைத்து என்ன செய்வது. ஏற்கனவே அந்த பாடல் ரீமிக்ஸ் போல அப்டேட் ஆகத்தான் இருக்கிறது என கூறியிருக்கிறார்.
இருந்த போதும் என்ஓசி பெற வேண்டும் என்பதற்காக தனது தந்தை இளையராஜாவை கேட்டபோது அந்த பாடலை நீ என்ன செய்யப் போகிறாய்.. அது ஏற்கனவே இந்த காலத்திற்கு ஏற்றது போல் தான் இருக்கிறது என பேசினாராம். ஆனால் சூழலால் அந்த பாடலை அந்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். அதாவது தந்தையாக இருந்தாலும் தான் என்ஓசி பெற வேண்டும் என யுவன் சங்கர் ராஜா அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், மகனாக இருந்தாலும் என்ஒசி பெற வேண்டும் என்றால் பிறர் பெறக் கூடாதா என இளையராஜாவுக்கு ஆதரவு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications