ஜனனி ஜனனி பாடல் ரெக்கார்ட்டிங்கின் போது! நடந்தது என்ன? இளையராஜா சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனனி ஜனனி பாடல் ரெக்கார்ட்டிங்கின் போது இசைக்குழுவே அழுதுவிட்டதாக இளையராஜா சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் உதிரிப்பூக்கள் படத்தின் டைட்டில் முன்பு என்ன இருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர், தமிழர் என்ற பெருமையை பெற்றார் இளையராஜா. அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டினர்.

ilayaraja

உலகமெங்கும் உள்ள இளையராஜாவின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த நிலையில் சிம்பொனி குறித்து பல்வேறு தகவல்களை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு இளையராஜா பேட்டி அளித்திருந்தார்.

தமிழ் இசை

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: சிம்பொனி எழுதுவது என்பது வெண்பா எழுதுவது போன்று கடினமானது. தமிழ் இசையில் உள்ள ராகம், தாளம் போன்று சிம்பொனிக்கென்று விதிகள் உள்ளன. விதிகளுக்கு உட்படாதவை சிம்பொனி வகையில் சேராது.

சிம்பொனி

சிம்பொனியை அரங்கேற்ற பிலஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவை அணுகினேன். அப்போது முதலில் இசைக் குறிப்புகளை அனுப்ப தயங்கினேன். ஆனால் அனுப்பிய இசைக் குறிப்புகளை பார்த்துவிட்டு அவர்கள் beyond perfection என பாராட்டினார்கள்.

சிம்பொனி விதிகள்

நான் 27 வயதாக இருக்கும் போது சி-மேஜர், டி-மேஜர் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. ராகம், தாளம், பல்லவி போன்று சிம்பொனிக்கும் விதிகள் உண்டு. ஜனனி ஜனனி பாடலை முதலில் ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. ரெக்கார்டிங் தொடங்கிய போது அவர் ஊரில் இல்லை.

இயக்குநர் சொன்னார்

இதனால் இயக்குநர் என்னை பாட சொன்னார். அவர் பெரிய இயக்குநர் என்பதால் மறுக்காமல் பாடினேன். ரெக்கார்டிங்கில் பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே இசைக்குழு, தயாரிப்பு குழுவினர் என அனைவரும் கண்கலங்கிவிட்டனர்.

27 வயதில்தான் தெரியும்

எனது இசையை பீத்தோவன் இசை வகைமைக்கு முன்பாக கிளாசிக்கல் வகைமையோடு ஒப்பிட்டனர். சாதாரண கிராமத்தில் இருந்து வந்த என்னை சிம்பொனியே அடையாளப்படுத்தியது. 27 வயதில்தான் எனக்கு எந்தெந்த ஒலி, எந்தெந்த சுரம் என்பது தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது குழந்தை பருவத்திலேயே அனைவருக்கும் தெரிகிறது.

விமர்சனங்களை பொருட்படுத்தமாட்டேன்

விமர்சனங்களை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை. இதற்காக நான் பத்திரிகை படிப்பதில்லை, டிவி பார்ப்பதில்லை. இசையை கற்றுக் கொள்ளவில்லை என்ற ஏக்கம் தற்போது உள்ளது. இன்னும் கற்றுக் கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.

காட்டுப்பூக்கள் டூ உதிரிப்பூக்கள்

மேலும் அவர் கூறுகையில் திரைப்படங்களின் தலைப்பு கூட மாற்றியுள்ளேன். காட்டுப்பூக்கள் என இயக்குநர் மகேந்திரன் கூறிய போது அதை உதிரிப்பூக்கள் என மாற்றுமாறு கூறியிருந்தேன். மகேந்திரனும் நானும் சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டிருப்போம்.

ஆலோசனைகள்

அப்போது பல ஆலோசனைகள் தோன்றும். இதற்கு பதிலாக இதை வைக்கலாம், அதை வைத்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அப்படித்தான் உதிரிப்பூக்கள் என மாற்றலாம் என சொன்னேன். மகேந்திரனும் ஏற்று டைட்டிலை மாற்றினார்.

3 நாட்கள்

திரைப்படங்களுக்கு நான் பின்னணி இசை அமைக்க அதிகபட்சமாக 3 நாட்கள்தான் எடுத்துக் கொள்வேன். இதைத் தவிர்த்து பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும். ஒரு முறை ஒரு ஆண்டில் 58 பாடல்கள் வரைக்கும் இசையமைத்திருந்தேன்.

புதிய முயற்சிகள்

ஒவ்வொரு முறையும் தெரியாததைதான் தேடிக் கொண்டிருக்கிறோம். தெரியாததை தேடும் போது உயர்ந்ததை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இசையில் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த புதிய முயற்சிகளுக்கு காரணம் என இளையராஜா தெரிவித்திருந்தார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+