கைதட்டல் ஜாஸ்தி ஆக ஆக கர்வம் கூடியது.. அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு!
சென்னை: என்னை இசைஞானி என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுகிறது... கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு நான் இசை அமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன்.
அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு வரவில்லை.
நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதையெல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன்.
நான் சிறுவனாக இருக்கும்போது கச்சேரி நடக்கும்போது, ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். அதைக் கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது. எனக்கு கிடைக்கும் கைதட்டல் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது.
ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்காகவா, இசைக்காகவா இல்லை நான் வாசிக்கிற திறமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகிறது. அதற்குப் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டும் என்னை அதைப் பற்றியே சிந்திக்க வைக்காது. தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications