Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதீத மகிழ்ச்சியால் நேற்று என்னால் அதிகமாக பேச இயலவில்லை” இசைஞானி இளையராஜா வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற இந்த விழாவில் இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. அத்துடன் சிம்பொனி இசையும் இசைக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Ilayaraja Thanks CM Stalin and Tamil Nadu Government in Latest Video

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இளையராஜாவுடனான அவரது அனுபவங்களை நினைவுகூர்ந்து பேசினார். மேலும், உலகநாயகன் கமல்ஹாசன் எம்.பி இளையராஜா உடனான அனுபவங்களைப் பகிர்ந்து அவருக்குப் புகழாரம் சூட்டினார்.

இளையராஜா புதிய வீடியோ

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழா குறித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், "நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு பாராட்டு விழாவை மிகச்சிறப்பாக திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன். நான் முதல்வரிடம் கேட்டேன்.. எதற்காக எனக்கு இதை செய்கிறீர்கள் என்று கேட்டேன். இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன்? நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல. சிம்பொனியில் சிகரம் தொட்டதால் அதை மிக முக்கியமான ஒன்றாக முதல்வர் கருதி, எனக்குப் பாராட்டு விழா நடத்துவதை தனது கடமையாக எண்ணிச் செய்திருக்கிறார். " எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வார்த்தை ஊக்கம் அளிக்கிறது

மேலும், "சங்க இலக்கிய நூல்களுக்கு இசையமைக்க வேண்டும் என முதல்வர் என்னிடம் வேண்டுகோள் விடுத்ததும், உங்களைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்ததும் மேலும் மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் மேடைகளில் மாற்றி மாற்றி நான் அவருக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறேன் என சொல்லுவார்கள். ஆக, நான் இருவருக்குமே நல்ல பாடல்களை இசையமைத்திருக்கிறேன் என்பதற்கு அவர்கள் இருவரின் வார்த்தைகளே சாட்சி." எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

முன்னதாக நேற்று விழா மேடையில் பேசிய இளையராஜா, "இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசைமையப்பாளருக்கு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம். முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மீது வைத்த அதே அன்பை அவரது தவப்புதல்வன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்.

இசை தான்

அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். ஒரு பாராட்டு விழாவில் எனக்கு கருணாநிதி, "இசைஞானி" என்ற பட்டத்தை கொடுத்தார். சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு என் வீட்டுக்கே வந்து பாராட்டினார் முதல்வர். பின்னர் நான் தமிழகம் திரும்பியதும் என்னை விமான நிலையத்திலேயே வரவேற்றார்.

தற்போது எனக்கு அரசு சார்பில் பாராட்டு விழா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது குழந்தைகளுக்கான நேரத்தை செலவழிக்காமல் இந்த சிம்பொனியை எழுதினேன். அவர்களுடன் நேரம் செலவிட்டிருந்தால் நான் சிம்பொனியை எழுதியே இருக்க முடியாது. அது போல் நீங்கள் விரும்பி கேட்ட அத்தனை பாடல்களையும் கம்போஸ் செய்திருக்க முடியாது." எனப் பேசினார்.

முன்னதாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஆண்டுதோறும் இசை கலைஞர்களுக்கு இளையராஜா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சங்க இலக்கியங்களை ஆல்பமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் இளையராஜாவிடம் வேண்டுகோள் வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+