உடைந்து போய்.. சோகத்தின் உருவாக நடந்து போன இளையராஜா.. இலங்கை மருத்துவமனையில்.. என்ன நடந்தது?
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா இலங்கை மருத்துவமனையில் சோகமாக நடந்து செல்லும் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
இளையராஜா இசையமைத்த 'ராசய்யா' படத்தில் 'மஸ்தானா, மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். அவரின் பல பாடல்கள் அந்த இனிமையான குரல் காரணமாக பெரிய அளவில் கவனம் பெற்றது. பாரதி படத்தில் 'மயில்போல', ராமன் அப்துல்லா படத்தில் 'என் வீட்டு ஜன்னல்' உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் ஆத்தாடி ஆத்தாடி என்ற இவரின் அனேகன் பட பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்த பாடல் ஆகும்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில வருடங்களாக இவர் பாடாமல் இருந்தார். சமீபத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார். இந்த நிலையில் அவரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளையராஜா; இசையமைப்பாளர் இளையராஜா இலங்கை மருத்துவமனையில் சோகமாக நடந்து செல்லும் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
பவதாரணி சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் தனது மகளின் உடலை பார்க்க இளையராஜா சோகமாக நடந்து சென்றுள்ளார். அவர் இப்படி நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தை உலுக்கி உள்ளன. அவரின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது.
கடுமையாக கஷ்டப்பட்ட பவதாரணி: 47 வயதாகும் அவர் மரணத்திற்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இளையராஜா மகள் பவதாரிணி தொடர்பாக, அவர் பெற்ற கடைசி கட்ட சிகிச்சைகள் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தொடக்கத்தில் கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது.
பித்தப்பையில் கல் இருப்பதாக நினைத்து அவருக்கு தொடக்கத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்படியே பித்தப்பையில் கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதற்கு சிகிச்சை தரும் போதுதான் அவருக்கு.. கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அவரின் கல்லீரல் புற்றுநோய் 4வது ஸ்டேஜில் இருந்துள்ளது. பொதுவாக புற்றுநோயை முதல் கட்டத்தில் கண்டுபிடித்தால் எளிதாக சரி செய்ய முடியும். ஆனால் 4வது ஸ்டேஜில் கண்டுபிடித்தால்.. 3ஐ தாண்டினால் காப்பாற்றுவது கடினம்.
கடினமான சிகிச்சை: பவதாரணிக்கும் இதே பிரச்சனை இருந்துள்ளது. கல்லீரல் புற்றுநோய்தான் கடைசியில் அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணியின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. 47 வயதாகும் அவர் மரணத்திற்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பவதாரணி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மரணம் இரங்கல்: இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே இரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications