Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜாவின் மகள் பவதாரிணி மரணம்.. வேதனை அளிக்கிறது.. தமிழிசை, எல் முருகன், சசிகலா இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று இலங்கையில் காலமானார். அவருக்கு தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமச்சர் எல் முருகன், சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. இவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணி, சிகிச்சை பலனிளிக்காமல் இன்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பவதாரிணியின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

 Ilayarajas daughter Bhavatharinis death is painful, Tamilisai, L Murugan, Sasikala condolence

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மகள் மறைந்த செய்தி அறிந்து திரைத்துறையினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபலமான பாடகியாகவும் திரைத்துறையில் பவதாரிணி வலம் வந்தார். இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் முதன் முதலாக பாடல் பாடினார். பாரதி பாடத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. இதேபோல் நடிகர் விஜயின் காதலுக்கு மரியாதை, ப்ரண்ட்ஸ் படத்தில் பாடல்களை பாடியுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் இது சங்கீத திருநாளோ என்ற பாடலை பாடியுள்ளார்.

தமிழிசை இரங்கல்: இந்த நிலையில் பவதாரிணி குடும்பத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ்தள பதிவில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எல் முருகன்: இதேபோல் மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் பவதாரிணி உயிரப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எல் முருகன் கூறியிருப்பதாவது:- இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, திருமதி.பவதாரணி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி..! இவ்வாறு எல் முருகன் கூறியுள்ளார்.

சசிகலா இரங்கல்: இதேபோல் சசிகலாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். சசிகலா கூறியிருப்பதாவது:- இசைஞானி இளையராஜா அவர்களின் மகள் பவதாரிணி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இசை உலகில் பவதாரிணி அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

தனது தந்தையை போன்று இசைஞானம் கொண்ட பவதாரிணி அவர்கள் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியிருக்கிறார். அதேபோன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்தும், தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 'பாரதி' படத்தில் அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்கு, தேசிய விருது பெற்று, அவரது தந்தைக்கும் பெருமை சேர்த்தவர்.

பவதாரிணி அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் இசையுலக ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+