அரசு அலுவலகம் வரும் மக்கள் மனநிறைவோடு செல்லனும்... என் ஆய்வுகள் தொடரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும் என்பதால் தனது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களுக்கு திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு சென்று வருகிறார்.
அண்மையில்கூட தேனி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி அலுலகம் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வுகளால் அரசு அலுவலகங்கள் எந்நேரமும் கவனமாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதில், "மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications