நாமக்கல்லை நடுங்க வைத்த கிட்னி திருட்டு! திரையில் நடந்தது தரையில் நடக்குது.. அரசுக்கு பறந்த கண்டனம்!
சென்னை: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிட்னி விற்பனை நடைபெற்று வருவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில் போதைப்பொருள், போலி மருந்து வரிசையில் சட்டவிரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது எனவும், திரைப்படங்களில் வரும் நிகழ்வுகள் எல்லாம் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் உண்மை நிகழ்வுகளாக மாறிவிட்டதாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கலில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருடும் கும்பல் நடமாடி வருகிறது. பள்ளி பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிட்னி பாளையம் என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது.
புரோக்கர் கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் ஏழ்மையான பின்னணி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள் அவர்களது சிறுநீரகங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களது சிறுநீரகங்கள் எடுக்கப்படுகிறது. பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் போதைப்பொருள், போலி மருந்து வரிசையில் சட்டவிரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து, பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைப் பகுதி போன்ற இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டதுள்ளதும், கிட்னி அளித்தவர்களின் முகவரி போலியானது என்பதும், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வசந்த நகர், காவிரி, ஆவத்திபாளையம், ஆவாரங்காடு போன்ற இடங்களிலும் கிட்னி இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள் என்பதும், தெரியவந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோத கிட்னி விற்பனை செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.சட்ட விரோத கிட்னி விற்பனை நடைபெறுவதற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடு என்று சொன்னால் அது மிகையாகாது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டவை. இந்த விதிகள் உறுப்பு விற்பனையைத் தடுப்பதற்கும், உறுப்புகளை பிரித்தெடுத்தல், சேமித்தல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கும் உருவாக்கப்பட்டவை.
இந்த சட்ட விதிகளின்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இதனைக் கண்காணிக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது அல்லது கண்டும் காணாமல் இருந்துவிட்டது என்பது தற்போதைய சட்ட விரோத கிட்னி விற்பனை மூலம் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, சட்ட விரோதமாக கிட்னி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்ட விரோதமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications