"லிவ்விங் டூ கெதர்".. ஏற்கனவே தனலட்சுமிக்கு ரெண்டு.. இதுல 3வது வேற.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்!
சென்னையில் கள்ளக்காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: ஏற்கனவே கள்ளக்காதல்.. இதுல லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வேறு.. கடைசியில் சோகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது வாழ்க்கையை!
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட்.. 37 வயதாகிறது.. கல்யாணமாகி மனைவி இருக்கிறார்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் மனைவியுடன் பிரச்சனை ஏற்படவும் தனியாக பிரிந்து வந்துவிட்டார். 10 வருடமாகவே ராபர்ட் தனியாகத்தான் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

லிவிங் டூ கெதர்
இந்நிலையில்தான் தனலட்சுமியை சந்தித்தார் ராபர்ட்.. அதே தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.. வயசு 34 ஆகிறது.. இவரும் கணவனை பிரிந்தவர்.. 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. தனலட்சுமியும், ராபர்ட்டும் 5 வருஷத்துக்கு முன்பு சந்தித்து கொண்டனர்.. கள்ளக்காதல் பற்றி கொண்டது. தினம்தோறும் சந்திப்பு, ஊர் சுற்றி ஜாலியாக இருந்த நிலையில், ஒருகட்டத்தில் 2 பேருமே ஒரே வீட்டில் தங்கி வாழ ஆரம்பித்தனர்.. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளவில்லை..

பழக்கம்
இங்குதான் தனலட்சுமி தன் வேலையை காட்டினார்.. ராபர்ட்டுடன் நெருக்கத்தை முடித்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில், இன்னொரு நபர் குறுக்கே வந்தார்.. அவருடனும் நெருங்கி பழகினார். எப்ப பாரு அந்த நபருடன் போனிலேயே இருப்பதை பார்த்த, ராபர்ட் கண்டித்தார்.. பலமுறை தகராறு செய்தார்.. இதனாலேயே இவர்களுக்குள் தினம்தினம் பிரச்சனை வெடித்தது... இதனால் மன உளைச்சலடைந்த தனலட்சுமி. 3 மாசத்துக்கு முன்னாடி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சி
தனலட்சுமி இறந்ததும் அதிர்ச்சியாகி விட்டார் ராபர்ட்.. தன்னால்தான், தான் கொடுத்த தொல்லையால்தான் தனலட்சுமி இப்படி தற்கொலை செய்துகொண்டதாக நினைத்து எந்நேரேமும் சோகத்தில் இருந்தார் ராபர்ட்.. சம்பவத்தன்று இரவு தனலட்சுமி வீட்டிற்கு வந்தார் ராபர்ட்.. ஆனால், மறுநாள் காலை கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர்தான் சந்தேகப்பட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்..

விசாரணை
ராபர்ட் அங்கே பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.. சடலத்தை மீட்ட சிட்லபாக்கம் போலீசார் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. ஏற்கனவே அமைந்த வாழ்க்கையை கெடுத்து கொண்டதுடன், 2 பேரும் தேவையில்லாமல் உயிரை விட்டுவிட்டனர்.. இவர்களின் குழந்தைகள்தான் பாவம்..!
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications