ஒரே ஒரு காபி கப்.. இந்த போட்டோவை சட்டுன்னு பாருங்க.. நெட்டிசன்களை குழப்பிய சென்னை கலைஞர்.. செம!
சென்னை: ட்விட்டரில் சென்னையை சேர்ந்த கலைஞர் ஒருவர் பதிவிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. நெட்டிசன்களை இந்த புகைப்படம் குழப்பி வருகிறது.
ஓவிய கலைஞர்கள் பலர் அழகான புகைப்படங்களை வரைந்து லைக்ஸ் அள்ளுவது அதிகரித்து வருகிறது. அதிலும் சில ஓவிய கலைஞர்கள் எது ஓவியம், எது புகைப்படம் என்றே தெரியாத அளவிற்கு தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

எப்படி?
இந்த நிலையில்தான் சென்னையை சேர்ந்த வருணா என்ற கலைஞர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அவர் பில்டர் காபி கப் ஒன்றை வரைந்து அதை வெளியிட்டு இருக்கிறார். டபரா செட்டில் காபி இருப்பது போல அழகாக வரையப்பட்டுள்ளது. காபியில் இருக்கும் நுரைகள் இதில் தத்ரூபமாக காட்டப்பட்டு உள்ளது.

காபி நுரைகள்
அதோடு காபி கப்பை சுற்றி காபி கொட்டைகள் இருப்பது போலவும் தத்ரூபமாக அவர் வரைந்து இருக்கிறார். புதிய டபரா செட் மினுமினுப்பது போலவும் அழகாக அவர் வரைந்து இருக்கிறார். இதை எல்லாம் விட சிறப்பு காபியில் இருந்து வரும் ஆவிதான். சூடான காபியில் இருந்து வரும் ஆவியை அப்படியே அவர் தத்ரூபமாக வரைந்து உள்ளார்.

குழப்பம்
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அப்படியே குழம்பி போய் இருக்கிறார்கள். இதை முதலில் பார்த்த பலர் உண்மையான காபி கப் புகைப்படம் என்று நினைத்துக் கொண்டனர். காபி கப் ஒன்றை போட்டோ எடுத்து போட்டுள்ளார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் உற்று பார்த்த பின்தான் அது வரைபடம் என்று பலருக்கும் தெரிந்துள்ளது.

டிரெண்டிங்
அந்த வரைபடத்தின் கமெண்டில் பலர் இது எப்படி வரைந்தீர்கள்.. அப்படியே தத்ரூபமாக இருக்கிறதே. ஆச்சர்யமாக இருக்கிறது. பார்க்கவே ஷாக்கிங்காக இருக்கிறது. முதலில் இதை உண்மையில் காபி கப் என்று நினைத்துக் கொண்டோம் என்று பலரும் அந்த கலைஞரை பாராட்டி உள்ளனர். நீங்களே கமென்ட்ஸில் சொல்லுங்க.. உங்களுக்கு பர்ஸ்ட் இந்த போட்டோவை பார்த்ததும் என்ன தோன்றியது?












Click it and Unblock the Notifications