பின்னணி இசைக்காக மட்டும் நினைக்கிறாங்க.. விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா திரைப்படத்தில் 'தர ரர ரர ரா' என மாஸ் பிஜிஎம் போட்ட இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தன்னை 'பின்னணி இசை'க்காக மட்டும் நினைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். "Underrated music director" என அனைவரும் சொல்லுவது மனதை புண்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் சாம் சிஎஸ். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, விக்ரம் வேதா, பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் இவரது இசை பெரிதும் கவனம் பெற்றது. குறிப்பாக விக்ரம் வேதா படத்தில் வரும் 'தர ரர ரர ரா' ஒரு பின்னணி இசை ஒலிக்கும். இந்த பிஜிஎம் மற்றும் பாடல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் சாம் சிஎஸ்.

im-only-remembered-for-background-music-says-vikram-vedha-movie-composer-sam-cs

இதுபோக புஷ்பா 2 திரைப்படத்திற்கான பின்னணி இசையிலும் இவர் பணியாற்றியுள்ளார். பிரபலமான பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்தாலும் அவரை அண்டர்ரேட்டட் இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் சொல்வதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான், பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உருக்கமாக பேசியுள்ளார். (அவரது பேட்டியின் முழு விவரங்களை காண வேண்டும் என்றால் இங்கே கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்).

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் செயல்பட்டு வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தன்னை 'பின்னணி இசை'க்காக மட்டும் நினைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். "Underrated music director" என அனைவரும் சொல்லுவது மனதை புண்படுத்துகிறது என்றும் பகிர்ந்துள்ளார். இயக்குநர் சாம் சிஎஸ் தனது பேட்டியில் கூறியதாவது:-

பெரிய படத்திற்கு இசை அமைக்கும் போது எனக்கு பயம் இருந்தது இல்லை. அது ஏன் என்றால், விஜய் படம் என்றால் அவர் பிரேமில் வரும் போது இசையே இல்லையென்றாலும் அது மாஸ்தான். அப்போது 100 சதவீதம் போட்டாலும் 1000 சதவீதமாக தெரியும். சின்ன படத்திற்கு உயிரை கொடுத்து போட்டாலும் கொஞ்சமாவது போகும். பயப்படுவது சின்ன படத்திற்குதான்.

Underrated என சொல்வதால் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படாது. ஏனெனில் உங்க கிட்ட 100 ரூபாய் இருக்கனும்னு ஆசைப்படும் போது 110 ரூபாய் இருந்தால் சந்தோஷம்தானே படுவீங்க.. இன்னொருத்தன் 1000 ரூபாய் வச்சிருக்கான் என கம்பேர் பண்ணக்கூடாது.. என்னோட இலக்கே 110 ரூபாய்தான்.

நான் இன்னும் ரீச் ஆகனும்னு தோன்றுகிறது" என்றார். மேலும் தன்னை 'பின்னணி இசை'க்காக மட்டும் நினைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். "Underrated music director" என அனைவரும் சொல்லுவது மனதை புண்படுத்துகிறது என்றும் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+