அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கை:

வடக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி. இது அதேபகுதியில் நீடிக்கிறது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும்.
இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல மவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அடுத்த 4 நாட்களுக்கு அதாவது நாளை முதல் 17-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். இதேபோல் அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications