Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னி ஆட்டம் முன்கூட்டியே ஆரம்பம்..சுட்டெரிக்கப்போகும் சூரியன்..எந்தெந்த மாநிலங்கள் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104.72 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அஞ்சி வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 2006ஆம் ஆண்டு 107.78 பாரன்ஹீட் பதிவானது. அதன் பிறகு, தற்போது சென்னையில் பதிவாகியுள்ள 101.12 பாரன்ஹீட் தான் கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பமாகும்.

IMD Predicts Increase In Temperature Tamil Nadu, Kerala and West Bengal

கடந்த பத்தாண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் அதிகபட்ச வெப்ப நிலை 14ஆம் தேதிக்கு மேல் தான் பதிவாகியுள்ளது இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி 101.12 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதங்களில் இதுவரை அதிக பட்ச வெப்ப நிலையாக 1908-ம் ஆண்டு 109.04 பாரன்ஹீட் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

IMD Predicts Increase In Temperature Tamil Nadu, Kerala and West Bengal

கிழக்குப் பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.

வேலூரில் அதிக பட்சமாக 104.72 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, திருப்பத்தூர் மற்றும் கரூர் பரமத்தியில் 104 பாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 103.1 பாரன்ஹீட் வெப்பமும், பாளையங்கோட்டையில் 102.02 பாரன்ஹீட் வெப்பமும் , மதுரையில் 102.56 பாரன்ஹீட் வெப்பமும், தரும புரியில் 102.2 பாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் 101.12 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. 16ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 25 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு இல்லை. காற்றின் ஈரப்பதம் 20 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 4 முதல் 6 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

கேரளா, கோவாவில் 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா மாநிலங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+