சென்னையை நெருங்கும் புயல்.. 15-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.. நிழலாடும் 2015
Recommended Video

சென்னை: அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும். அந்த புயல் 15-ஆம் தேதி சென்னையை நெருங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் வரை பரவியுள்ளது.
இந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீன் பிடிக்க செல்லவேண்டாம்
இதன் காரணமாக அந்தமான், நிக்கோபார் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நகரும் வாய்ப்பு
இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்களும், சர்வதேச வானிலை அமைப்புகளும் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கணிப்பு
வருகிற 14-ஆம் தேதி சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். 15-ஆம் தேதி காலை சென்னையை நெருங்கும். அன்றைய தினம் மாலை புதுவை நோக்கி நகர்ந்து அன்று இரவு அல்லது 16-ஆம் தேதி காலையில் புதுவை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கரையை கடந்ததும் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் ஏற்பட வாய்ப்பு
இப்போதைய நிலையில் காற்று வீசும் திசையை வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே 13-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications