மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக தமிழக அரசு தொழில்முனைவோர் பயிற்சிகள் வழங்கவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியமோ, கடனோ பெற உதவுவது குறித்தும் அதில் விளக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசு
தமிழக அரசு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கும், திறம்பட நடத்துவதற்கும் தொழில்முனைவோர்களை உருவாக்கவும், பல்வேறு திட்டங்களையும், பயிற்சிகளையும், செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரகம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக லோன் மேளா, தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சுய தொழில்
மாற்றுத்திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூபாய் 25,000 மானியம் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒருபகுதி மானியமாகவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது.

பெட்டிக்கடை
மாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பால்மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், டீக்கடை மற்றும் நொறுக்குத்தீனி ஸ்டால்கள், இட்லி கடைகள், டிபன் கடைகள், கணிணி மையங்கள். ஜெராக்ஸ் நகலகம் ஆகியவற்றை தொடங்கி பயனடைந்து வருகின்றனர்.

தொழில் முனைவோர்
தமிழக தொழில் முனைவோருக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) யின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (The Entrepreneurship Development and Innovation Institute (EDII) சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.

படிற்சி முகாம்
தொழில் முனைவோருக்கான பயிற்சிகளை அவ்வப்பொழுது இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இப்பயிற்சிகள், திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும், இறுதி செய்யவும், கடன் பெறவும், புதிய தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்கிறது. இத்திட்டத்தினை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 79 நபர்களுக்கு மூன்று அணிகளாக, 4.4.2022 முதல் 6.4.2022, 11.4.2002 முதல் 13.4.2022 மற்றும் 18.4.2002 முதல் 20.4.2022, ஆகிய நாட்களில் திட்ட பொருளாதார திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட மதிப்பீடு செய்தல், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இனங்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications