மெடிக்கல் ஷாப்க்கு "ஆப்பு".. பிடுங்கப்பட்ட லைசென்ஸ்.. மருந்து வாங்க இனி "இது" கட்டாயம்.. தமிழக அரசு
சென்னை: மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, மக்களவையில் மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக ஒரு பதிலளிக்கும்போது, "அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களை நியமிப்பது, அதற்கான தகுதி மற்றும் சம்பளம் போன்றவை அந்தந்த மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டதாகும்.

விதிமுறைகள்: பார்மஸி தொழில் ஒழுங்குபடுத்துதல் விதிமுறைகள் 2015 என்னும் சட்டத்தை ஒன்றிய பார்மஸி கவுன்சில் உருவாக்கியுள்ளது. அதன்படி, டி. பார்ம் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் பல பிரிவுகளில் பணிபுரிய விதிகளில் இடமளிக்கப்பட்டுள்ளது. மருந்தாளுனர்கள் மருந்து சீட்டு எழுதி தருவதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
காரணம், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்துகள் விதிகள், 1945-ன் படி குற்றமாகவே கருதப்படுகிறது.
சில்லறை மருந்து: இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம், மாநிலம் முழுவதுமுள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன..
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த (01.04.2023 - 31.12.2023) 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விற்பனைகள்: விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களில் 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மெடிக்கல் ஷாப்: மேலும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களிலும் திடீர் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications