ரெடியா இருங்க.. இனி ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. ரயில்வேயின் அடுத்த அறிவிப்பு வரப்போகுது.. சூப்பர்ல
சென்னை: ரயில்வே நிர்வாகமானது பல்வேறு அதிரடிகளை செய்தபடியே உள்ளது.. அந்தவகையில், சென்னை ரயில்வேயில் இன்னொரு அறிவிப்பு விரைவில் வரப்போகிறது என்கிறார்கள்.. என்னவாம்?
சமீபத்தில் நாடு முழுவதும் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்... மிகவும் அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலானது முழுவதுமாக மின்சாரத்தின் மூலமாக இயக்கப்படுகிறது.
பொதுவாக நீண்ட தூர ரயில் பயணத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் இந்த வந்தே பாரத் ரயில்கள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் நாட்டின் வட மாநிலங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

வந்தே பாரத்: இந்நிலையில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, வந்தே பாரத் என்ற திட்டத்தை சென்னை டு கோவைக்கு இடையே தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயணத்திற்கான நேரம் வெகுவாக குறையும். வழக்கத்தை விட கட்டணம் சிறிது அதிகமாக இருந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் வந்தேபாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் வந்தே வாரத்தில் திட்டம் தொடக்கத்தின்போது பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை டு மதுரை இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் தொடங்க வேண்டும் என்றும் அதன் மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்றும் கோரிக்கை வைத்தார்.. பின்னர், தெற்கு ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருக்கிறது.. அதாவது தென்னிந்தியாவிற்கு மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயிலானது சென்னை டூ மதுரைக்கு இடையே இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மெட்ரோ ரயில்: அதேபோல, சென்னைவாசிகளுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாக உள்ளது.. சென்னை-ரயில் பெட்டிகளின் நுழைவு பகுதியிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளதாம்.. இப்போதைக்கு ரயில்வே நிலையிங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.. அதேபோல, பெட்டிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.. அதாவது, மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களில், 6,646 பெட்டிகளில் சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதில், மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக, 1,295 பெட்டிகள், தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, ரயில் பெட்டிகளின் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவு வாயிலில், அதாவது 2 பக்கமும் உள்ள கதவு பகுதிகளில், கேமரா பொருத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வுகளை துவங்கி உள்ளது.. இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, வெளி பகுதிகளில் இருந்து கல் வீச்சு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும், பெட்டியில் யாரெல்லாம் ஏறி, இறங்குகின்றனர் என்பதையும் அடையாளம் காண முடியும். எத்தனை உடைமைகளை எடுத்து வந்தனர் என்பதையும் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது.. சமீபத்தில், கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் நடந்த தீ எரிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிஎடுத்தது..
சிசிடிவி கேமராக்கள்: ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில், எலத்தூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயிலின் டி1 பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பயணிகள் மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார்.. இதில் 3 பேர் உடல்கருகி எரிந்த நிலையில், இந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துவிட்டனர்.. ஆனால், குற்றவாளியின் அடையாளம் உடனடியாக தெரியப்படவில்லை.. இப்படியான குற்றங்களை தடுத்து நிறுத்தவும், இனிமேல் வன்முறைகள் நிகழாமல் தடுக்கவும், ரயில் பெட்டிகளின் நுழைவு பகுதிகளிலும் கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இந்நிலையில், சென்னை-ரயில் பெட்டிகளின் நுழைவு பகுதியிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவது, நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications