சென்னைவாசிகளே.. நோட் பண்ணிக்குங்க.. மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா நீங்கள்?.. வெளியான முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதமாக மெட்ரோ ரயில் அமைந்துவரும் நிலையில், தற்போது மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மெட்ரோ முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

தற்போது, 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Important announcement by chennai metro and notice board in the parking area

வழித்தடம்: இந்த 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை ரூ.1,620 கோடி செலவில் வாங்க ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் ஏஸ்பிடி மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இப்படி பயணிகளின் நலனுக்கான பல்வேறு முயற்சிகளை சென்னை மெட்ரோ மேற்கொண்டு வரும்நிலையில், அவ்வப்போது சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் இப்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, அதன்பிறகு மெட்ரோவில் ஏறி சென்று வருகின்றனர்... இதற்கு கட்டணமாக 6 மணிநேரத்துக்கு டூவீலர் வாகனங்களுக்கு ரூ.20-ம், காருக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது.

Important announcement by chennai metro and notice board in the parking area

சில்மிஷம்: ஆனால், இப்படி வாகனம் நிற்கும் இடத்தில் சிலர் ஜோடியாக வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, அதற்கு கட்டணத்தையும் செலுத்திவிட்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.. சிலர் சில்மிஷங்களிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.. மேலும் சிலர் வாகனங்களில் உள்ளே இருந்து கொண்டே சிகரெட் பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் என பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.. இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகளும் உருவாகிவிடுகிறது..

பொதுஇடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஊழியர்கள், அதை தட்டிக்கேட்டாலும், "நீ யார் அதை கேட்க? வண்டி நிறுத்துவதற்குதான் கட்டணம் செலுத்தி விட்டோமே? நாங்கள் என்ன செய்தாலும் தட்டிக் கேட்க நீங்கள் யார்? என்று வாய் தகராறும் வெடித்து விடுகின்றன.. இதை தடுக்காவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று பலரும் எச்சரித்துவந்ததுடன், இதுதொடர்பாக நிறைய புகார்கள் மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் சென்றபடியே இருந்தன.. இதையடுத்து, அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட உத்தரவிடப்பட்டது..

Important announcement by chennai metro and notice board in the parking area

கெடுபிடி: மேலும், வாகனத்தில் உட்காருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையினை அனைத்து மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயிலிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்னொரு அதிரடியை தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+