வந்துருச்சு மெசேஜ்.. ரெடியா மக்களே.. காலை 9 முதல் மாலை 4 மணி வரை.. ஸ்பெஷல் முகாம்.. தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 3000 இடங்களிலும், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்களும் இன்று நடைபெற உள்ளன.

மிக்ஜாம் புயலின் தாக்கம் இன்னமும் அடங்கவில்லை.. பெரும்பாலான குடியிருப்புகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை.. ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது..

Important announcement by TN Government and for Special Medical camp today in 4 districts affected by the Chennai Flood

தமிழக அரசு: எப்போதுமே சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது. நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து, வீடுகளில் தேங்கி இருப்பதாலும், இன்னும் வெள்ளம் வடியாமல் மழைநீர் தேங்கி உள்ள சூழலில், கொசு உற்பத்தி அதிகரிப்பதாலும் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது... இதனால், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. சளி, காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையை நாடி வருகிறார்கள்..

மருத்துவ முகாம்கள்: இதனை தடுக்கவே தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்றைய தினம் நடைபெற உள்ளன. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருந்தார்.. அதில், "மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினேன்.

மருத்துவ முகாம்கள்: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த அக்.23 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். தற்போது பருவமழைக் காலமாக உள்ள காரணத்தினால் தமிழக முதல்வரின் உத்தரவின்படி டிசம்பர் 9 (இன்று) அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 3000 இடங்களிலும், அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

அறிவுறுத்தல்: மேலும், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+