அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு முக்கிய அறிவிப்பு.. கல்வித்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதேவகையிலான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்ய வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாகவும், சில பள்ளிகளில் குறைவாகவும் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதை கவனிக்கும் பள்ளிகல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளும், ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளும் ஒன்றோடு ஒன்று பேசி, அனுமதிக்கப்பட்ட அளவில் ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவிட்டு வருகிறது.

Important announcement for teachers working in government aided schools in tamil nadu

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் நிறைவேற்றப்படுவதன் மூலம், அரசுக்கு நிதி இழப்பு குறையும் என்பதுடன், பணி நிரவல் மூலம், குறைவான ஆசிரியர்களை கொண்டு இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பது முக்கிய காரணம் ஆகும். அதேபோல் பள்ளி கல்வியாண்டு தொடங்கும் முன்பே மாறுதல் மற்று பணி நிரவல் திட்டம் செயல்படுத்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பார்வை குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாணவர் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.உபரி ஆசிரியர்கள் விவரங்களையும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரங்களையும் முதன்மை கல்வி அலுவலரிடம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.

பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதே வகையான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்ய வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து அரசாணை எண் 146-ல் தெரிவிக்கப்பட்டு உள்ள நெறிமுறைகளின்படி தொடர் பணிநிரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+