சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம்
சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பலகைகளை அகற்றுவதற்கான செலவும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து 1913 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் அனுமதி மற்றும் உரிமம் இன்றி பொது இடங்கள், தனியார் கட்டிடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சட்டவிரோத விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அகற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்ற நகரங்களை போல் சென்னையில் போஸ்டர், பேனர் கலாச்சாரம் வருவதை மாநகராட்சி விரும்புவது இல்லை... மற்ற ஊர்களில் ஆள் உயர பேனர் வைப்பது, கல்யாணத்திற்கு பிளக்ஸ் வைப்பது போன்ற கலாச்சாரங்கள் இல்லை..

எனினும் இங்கு வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் அதிக அளவில் விளம்பர பேனர்களை வைக்கின்றன. அதேபோல் அரசியல் கூடடம் நடைபெறும் பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் சிறிய அளவில் வைப்பார்கள். அப்படி வைக்கப்படுவதை கண்டுபிடித்து சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுப்பது உண்டு. அந்த வகையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னையில் விளம்பர பலகைகள் அமைக்க மாநகராட்சி கமிஷனரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குழு விண்ணப்பங்களை பரிசீலித்து உரிமம் வழங்கி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விளம்பர பலகைகள் அமைப்பதில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை, கோடம்பாக்கம் தியாகராய நகர் சீனிவாசன் தெரு, காசி திரையரங்க சந்திப்பு, அடையாறு திருவான்மியூர் தெற்கு மாதா தெரு - ஈ.சி.ஆர் சந்திப்பு மற்றும் தேனாம்பேட்டை கோபதி நாராயண தெரு ஆகிய 5 இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டன. அந்தப் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலகைகளை அகற்றுவதற்கான செலவும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து 1913 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications