ரூ.5000 முதலீட்டில் 8 லட்சம்.. போஸ்ட் ஆபீஸ் FD vs RD! ரெக்கரிங், ஃபிக்சட் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
சென்னை: எதிர்கால தேவை, நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை போன்றவற்றிற்கான பணப்பாதுகாப்பு அனைவருக்குமே அவசியமாகிறது.. இதற்காகவே, தபால் நிலையங்கள் இப்போது நமக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி வெறும் 5 ஆயிரம் செலுத்தி 8 லட்சம் கிடைக்கும் திட்டம் ஒன்று மக்களை கவர்ந்து வருகிறது. அது என்ன தெரியுமா?
அனைவருமே நிம்மதியான எதிர்கால வாழ்வுக்குதான் திட்டமிட்டு நகர வேண்டியிருக்கிறது.. இதற்காக சேமிக்க வேண்டிய கட்டாயமும் எழுகிறது.

இன்றைய காலத்தில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கையில் பணம் நிற்பதுமில்லை.. எனவேதான், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பலரும், சேமிப்பை நாடுகிறார்கள்.. அந்தவகையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன..
இந்த சேமிப்பு திட்டங்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.. இதற்கு காரணம், குறைந்த முதலீட்டில் இந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம். குறைந்த டெபாசிட்டிற்கு லாபத்தை வாரி வழங்குகிறது.. அத்துடன் நிதி பாதுகாப்பும், அரசின் உத்தரவும் உள்ளது.. வட்டியும் கணிசமாக பெற முடிகிறது..
நிலையான வைப்புத்தொகை (FD)
அந்தவகையில், FD மற்றும் RD போன்றவை பற்றியும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், இவை 100 சதவீதம் % பாதுகாப்பானது.. ஆரம்பத்தில் இதன் வட்டி விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023 வட்டி விகிதம் 6.2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு பிறகுதான், FD மற்றும் RDகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் சூழல் ஏற்பட்டது.
நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) மற்றும் ஆபத்து இல்லாமல் வருமானத்தைப் பெற விரும்புபவர்களின் முதல் தேர்வான சேமிப்பு திட்டமாக இருந்து வருகிறது.
FDகளை பொறுத்தவரை, பெருந்தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக டெபாசிட் செய்ய வேண்டும். தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை (FD) தபால் அலுவலக நிலையான வைப்புத் தொகைகளுக்கான கால அளவு 1 முதல் 5 வருடங்கள் வரை இருக்கும்.
இந்த முதலீட்டுக்கு வருமான வரிச்சட்டப் பிரிவு 80Cன் கீழ் 5 ஆண்டு காலத்திற்கு வரி சேமிப்பு சலுகைகளை பெறலாம். இந்த நிலையான வைப்புத்தொகையில் குறைந்தபட்சமாக ரூ.1000ல் இருந்து முதலீடு செய்யலாம், அதே நேரத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதும் இல்லை.
தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD)
RD என்பது தொடர் வைப்பு திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து கடைசியில் வட்டியுடன் பெரிய தொகையை பெற முடியும்.. இது ஒரு வகையான சேமிப்பு திட்டமாகும். தபால் அலுவலக RD அரசாங்க உத்தரவாதத்துடன் செயல்படுகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். RDக்களில் மாதம் ஒரு முறை செலுத்தலாம்.
தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) திட்டத்தில், முதிர்வு காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது. தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகையில் மாதாந்திர டெபாசிட்டுக்கான குறைந்தபட்ச தொகை ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 01.01.2024 முதல், ஆண்டுக்கு 6.7% (காலாண்டு கூட்டு) வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
RD, FD வித்தியாசங்கள்
RD, FD இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு மற்றும் கால அளவு, அதன் வருமானத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. FDகளுடன் ஒப்பிடுகையில் RDகளில் வட்டி சற்று குறைவாகவே இருக்கும்.
போஸ்ட் ஆபிஸில் வட்டி விகிதம் 6.2%ஆக உள்ள நிலையில், மாதம் வெறும் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்தால் போதும். இப்படியே 5 வருடம் டெபாசிட் செய்தால் வட்டியுடன் சேர்ந்து 3.52 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும் 5 வருடங்கள் அதாவது ஒட்டுமொத்தமாக 10 வருடங்கள் போட்டால், நமக்கான மொத்த வருவாய் 8.32 லட்சமாக அதிகரிக்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications