தட்கல் டிக்கெட் டூ யுபிஐ ரூல்ஸ் வரை.. ஜூலை முதல் மாறப்போகும் விஷயங்கள்.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: தட்கல் டிக்கெட் முதல் யுபிஐ ரூல்ஸ் வரை வரும் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து மாற்றம் வருகிறது. ஆதார் - பான் மற்றும், தட்கல் டிக்கெட் எடுக்கும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வங்கிகள் தங்களின் கட்டணத்தை திரும்பப் பெறுதல் கோரிக்கைகளை NPCI-யின் அனுமதி இல்லாமல் நேரடியாக பரிசீலித்து முடிவெடுக்கலாம். இது ஜூன் 20, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது.

* ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன், அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி ஆதார் சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.
* ஜூலை 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு மற்றும் (OTP) கட்டாயமாக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. ஏசி வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கு காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை, ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை நேரக் கட்டுப்பாடு பொருந்தும்.
* தட்கல் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் பலரும் தெரிவித்த நிலையில், ரயில்வே நிர்வாகம் மேற்கூறிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN) ஜிஎஸ்டிஆர் -3 பி (GSTR-3B) மாதாந்திர படிவத்தை திருத்த முடியாததாக மாற்றுகிறது. மேலும், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகு ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய முடியாது. ஜிஎஸ்டிஆர்-1 முதல் ஜிஎஸ்டிஆர்-9 வரை உள்ள அனைத்து படிவங்களும் இந்த விதிமுறைக்கு உட்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மாற்றங்கள்
ஹெச்.டி.எப்.சி வங்கி ஜூலை 1, 2025 முதல் கிரெடிட் கார்டு கட்டணங்களில் மாற்றங்களை கொண்டு வருகிறது. . மாதம் ₹10,000-க்கு மேல் செலவு செய்தால் போதும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். ஆன்லைன் கேமிங்களுக்கான பரிவர்த்தனைகள், கல்வி கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவுகளுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். அதிகபட்சமாக கட்டணம் ₹4,999 ஆக இருக்கும்.
அதேபோல, ஆன்லைன் விளையாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி(ரிவார்டு) புள்ளிகள் வழங்கப்படாது. காப்பீட்டு கட்டணம் செலுத்தினால் கிடைக்கும் ரிவார்டு புள்ளிகளுக்கும் மாதாந்திர வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகள் தனிநபர் முதல் நிறுவனங்களுக்கு வரை தொடர்புடையதாக உள்ளது. குறிப்பாக தட்கல் டிக்கெட் விதிகளில் கொண்டு வரப்படும் மேஜர் மாற்றங்கள் பயணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகும். இல்லையெனில் 1 ஆம் தேதிக்கு பிறகு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications