Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திமிங்கலம்" மாட்டுதே.. துண்டு சேருதே.. திமுகவுக்கு வருதா அந்த கட்சி.. பற்றவைத்த "புள்ளி".. அப்ப பாஜக

செல்லூர் ராஜூ திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த விவகாரம் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக இரு தரப்பிலும், நிலவிவந்த அதிருப்தி புயல் அமைதி கொண்டுள்ளது.. இணக்கம் கூடியுள்ளது.. கூட்டணி உறுதியாகி உள்ளது.. தோழமை தொடர்கிறது.. ஆனால், செல்லூர் ராஜு ஏன் இப்படி பேசினார் என்பதுதான் புதுசூறாவளியாக வீச துவங்கி உள்ளது.
கடந்த சில தினங்களாகவே, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன.. அதேபோல, அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்வினையாற்றப்பட்டது.

மற்றொருபக்கம், அதிருப்தியாளர்கள் தொடர்ந்து பாஜகவில் இருந்து அதிமுக நோக்கி கிளம்பி சென்றனர்.. இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்தும் இருந்தனர்..

 கடிவாளம்

கடிவாளம்

ஆனால், நேற்று ஒரே நாளில் எல்லாவிதமான பிணக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.. பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி தரவேண்டாம், அதனால், அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்சனை வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கடிவாளம் போட்டுவிட்டார். அதுபோலவே, மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபி முனுசாமி போன்றோரும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் இரு தரப்பிலுமே சமாதானம் தவழ துவங்கிவிட்டது.

வாய்க்கொழுப்பு

வாய்க்கொழுப்பு

ஆனால், மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய பேச்சுக்கள் மட்டும், புயலை கிளப்பிவிட்டுள்ளது.. செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, "எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது... இப்போது கசக்கிறதா? பாஜகவிற்கு சகிப்புத்தன்மை வேண்டும்.. வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது.. மத்தியில் ஆளுகிறோம் என்ற திமிர் கூடாது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக இனியும் பொறுத்து கொண்டிருக்காது" என்று காட்டமாக சீறியிருந்தார்..

 வீசிய குண்டு

வீசிய குண்டு

அதுமட்டுமல்ல, "அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர். திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். எடப்பாடி பழனிசாமி மீதும் பாசம் கொண்டவர்" என்று அடுத்த குண்டையும் சேர்த்தே வீசினார் செல்லூர் ராஜூ. செல்லூர் ராஜு இப்படி பேசியதுமே, இதற்கு உடனடி பதில் தந்துள்ளார் திருமாவளவன்.. அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என்று செல்லூர் ராஜூ பேசி இருக்கிறார்... அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி.. திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம்.. திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி" என்று தெரிவித்துள்ளார்..

 டபுள் கிரேட்

டபுள் கிரேட்

2 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக்கூடாது என்று பகிரங்கமாகவே பொதுவெளியில் அறிவித்திருந்த திருமாவளவன், இந்த முறை அதுகுறித்து கூறாமல், திமுக கூட்டணியுடன் இருப்பதை மீண்டும் அழுத்தமாக உறுதி செய்துள்ளார்.. ஆனால், செல்லூர் ராஜு எதற்காக, திருமாவளவனை அதிமுகவுக்குள் அழைத்தார் என்பதுதான் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது.. பாமக, பாஜக இரு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், பாமக, பாஜக இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவதில்லையா? பாஜகவை அதிமுக கழட்டி விடப்போகிறதா? என்ற சந்தேகம் மீண்டும் கிளம்பி உள்ளது.

 திருமா சுருக்

திருமா சுருக்

இதுகுறித்து நாம் சில அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, செல்லூர் ராஜு திருமாவுக்கு அழைப்பு விடுத்த விஷயத்தை 2 விதமாக அணுகலாம்.. முதலில் இது செல்லூர் ராஜுவின் தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்.. ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்றோர் இதேகருத்தை சொல்லியிருந்தால் மட்டுமே அதை சீரியஸாக பார்க்கவேண்டும்.. காரணம், இவர்கள்தான் எதிர்க்கட்சி சார்பில் அனைத்து விஷயங்களுக்கும் மீடியாவில் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள். அதனால், செல்லூர் ராஜு பேசியதை பொருட்படுத்த வேண்டாம்.

 உருவபொம்மை

உருவபொம்மை

அதேபோல, கட்சியின் மூத்த தலைவரான செல்லூர் ராஜு ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் என்றால், அதை எளிதாக கடந்து செல்ல முடியாது.. அன்று அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை முதன்முதலில் கிளப்பிவிட்டதே செல்லூர் ராஜூ தான்.. அப்படி இருக்கும்போது, கூட்டணியில் உள்ள பாஜகவை, அதுவும் அக்கட்சியின் மாநில தலைவரை இத்தனை காட்டமான வார்த்தைகளில் விமர்சிக்கிறார் என்றால், அதற்கான பின்னணியையும் ஆராய வேண்டி உள்ளது.. எடப்பாடியின் உருவபொம்மையை எரித்ததால், இவ்வாறு ஆதங்கத்தில் செல்லூரார் பேசியிருக்கலாம் என்றே எடுத்துக் கொண்டாலும், கடந்த காலங்களில் இவ்வளவு தடித்த வார்த்தைகளை சீனியரான செல்லூரார் யாரையுமே பேசியது கிடையாது" என்றனர்.

சின்னம்மா

சின்னம்மா

இந்நிலையில், வேறு சில தகவல்களும் பரபரக்கின்றன.. கடந்த வருடம், செல்லூர் ராஜுவை ஓபிஎஸ் கூடாரம், தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக செய்திகள் கசிந்தன.. காரணம், செல்லூர் ராஜுவை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படுபவர்.. இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.. சிறையில் சசிகலா இருக்கும்போதுகூட "சின்னம்மா விரைவில் விடுதலையடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியவர் செல்லூர் ராஜூ.. ஆனால், சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இதுவரை முன்வைத்ததில்லை..

 லேசா லேசா

லேசா லேசா

முக்கியமாக, அந்த நேரத்தில், சசிகலாவுக்கு எதிராக மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றியபோது, செல்லூர் ராஜூ மட்டும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ் பக்கம் அல்லது சசிகலா பக்கம் செல்லூர் ராஜு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரத்து, அந்த விஷயம் அப்படியே அமுங்கியும் போய்விட்டன. ஆனால், சமீபகாலமாகவே, தென்மண்டலங்களில் ஆர்பி உதயகுமாருக்கு நிறைய முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி வருவது, செல்லூர் ராஜுவுக்கு லேசான அதிருப்தியை தந்ததாகவும் கூறப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், செல்லூர் ராஜுவின் பாஜகவுக்கு எதிரான இன்றைய பேச்சு மறுபடியும் கொந்தளிக்க துவங்கி உள்ளது..

 வெள்ளந்தி மனசு

வெள்ளந்தி மனசு

இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. பாமக திமுகவுடன் நெருங்கி வருவதாக சமீப காலமாகவே தகவல்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன.. அதற்கேற்றபடி, திமுகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று பாமகவும் இதுவரை சொல்லவில்லை.. பாமக எங்கள் கூட்டணியில் வேண்டாம் என்று திமுகவும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.. இரு கட்சிகளிடமும், அரசியல் ரீதியான இணக்கமான சூழல் நல்லமுறையிலேயே உள்ளது.. ஒருவேளை, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க நேர்ந்தால், விசிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது..

 டபுள் ஷாக்

டபுள் ஷாக்

இதையும் மனதில் வைத்து செல்லூர் ராஜு பேசியிருப்பாரோ? எதற்காக திருமாவளவனுக்கு வலையை திடுதிப்பென்று வீசியுள்ளார்? என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. பொதுவாக, மனசில் எதையும் வைத்து கொண்டு பேசாத வெள்ளந்தி மனிதர் செல்லூர் ராஜு.. உள்நோக்கத்துடன் பேசுவதோ, மறைமுகமாக பிறர் மனம் புண்படும்படியாக பேசுவதோ, யாரையும் காயப்படுத்தியதும் இல்லை என்றாலும் திருமாவளவன் குறித்து பேசியதன் "அர்த்தம்"தான் இன்னும் பலருக்கு பிடிபடவில்லை என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+