இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே.. ரெஜிஸ்ட்ரேஷன் அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் சொத்து அறிக்கை 25.07.2023க்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.07.2023 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் W.P. Nos.2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No.3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 7(3)(a)ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து" சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்கள்(தாய், தந்தை. சகோதரர், சகோதரி, கணவர்/மனைவி, மகன், மகள் மற்றும் கணவர்/மனைவி-ன் தாய் தந்தை மற்றும் சகோதரர் சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண்(PAN) இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்கள் /துணைப்பதிவுத்துறை தலைவர்கள்/ 25.07.2023க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு: சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன. எந்தெந்த சேவை கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டாலும் பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மட்டும் மாற்றப்படாமலே இருந்தது.
எனவே, பத்திர பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த 20 இனங்களுக்கும் சேவைகளின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/ லிருந்து ரூ.1,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது நாளை முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications