நீலகிரியில் 5 நாளைக்கு ரூட்டே மாறுது! கனரக வாகனங்களுக்கு நோ அனுமதி.. சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு
சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என்று தொடர் விடுமுறைகள் வருவதால், சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு அதிகமாக வருவது வழக்கமாகும்.. இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கவும், நீலகிரி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் இன்னலை தவிர்க்கவும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது... அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை கொண்டாட்டம்
மற்றொருபுறம் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
இதையடுத்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவிற்கும் பயணப்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் வசதிக்காக, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் வருகின்றன..
ஆயுத பூஜை, பள்ளி விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.,. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். நீலகிரி அருகிலேயே கேரளா உள்ளதால், அந்த மாநிலத்திலிருந்தும், ஏராளமானோர் நீலகிரியில் குவிந்துவருகிறார்கள்.
நீலகிரி சுற்றுலா பயணிகள்
இதனால் நீலகிரியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் வருவதால் இ-பாஸ் சோதனையில் ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தீவிர இ-பாஸ் சோதனைக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதனால், மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ பாஸ் மையத்தில் சோதனைக்காக வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று செல்கின்றன.
போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து போலீசார் செல்லும்போது, தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகிறார்கள்.. மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.. தாழ்வான பகுதியில் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த தொடர் விடுமுறையால் நீலகிரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் அந்த ரூல்ஸ்
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
- அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
- குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும்.
- அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
- கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும்
- கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
- காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications