365 நாளில் 9940 ஆணுறைகளை ஆர்டர் செய்த நபர்.. அடே யாருய்யா நீ? இந்த ஆண்டின் விநோத ஆர்டர்களின் லிஸ்ட்
சென்னை: நாளையுடன் 2023ம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டில் 'பிளின்கிட்' டெலிவரி மூலம் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட பொருள் எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்திருக்கிறார்.
சொமாட்டோவை போலவே பிளின்கிட்டும் ஒரு டெலிவரி நிறுவனமாகும். கடந்த 2022ம் ஆண்டில் இந்த நிறுவனத்தை சொமாட்டோ வாங்கியது. தற்போது சொமாட்டோவின் கீழ்தான் பிளின்கிட் செயல்பட்டு வருகிறது. இது மளிகை பொருட்களை கடையிலிருந்து பெற்று ஆர்டர் செய்பவர்களுக்கு விநியோகித்து வருகிறது. சோப்பு, சீப்பு, ஷாம்பு, சாக்லேட், பிஸ்கெட், அரிசி, மொபைல் போன் என எதை வேண்டுமானாலும் இதில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

அந்த வகையில் 2023ம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த ஆண்டில் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்து Blinkit Trends 2023 என்கிற இடத்தை பிடித்திருக்கிறார். மற்றொருபுறம் குருகிராமை சேர்ந்த நபர் இந்த ஆண்டில் 65,973 லைட்டர்களை ஆர்டர் செய்திருக்கிறார். இந்த வரிசையில் 'பார்ட்டி ஸ்மார்ட்' மாத்திரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது 30,02,080 மாத்திரைகள் இந்த ஆண்டு வாங்கப்பட்டிருக்கின்றன. முதல் முதலாக குடிப்பவர்கள் அடுத்த நாள் காலையில் எதிர்கொள்ளும் ஹேங்ஓவரை தவிர்க்க இந்த மாத்திரையை பயன்படுத்துவார்கள்.
மற்றொருவர் வித்தியாசமாக ரூ.1,59,900 மதிப்புள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன், ஒரு பாக்கெட் லேஸ் மற்றும் ஆறு வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருக்கிறார். அதேபோல வேறு ஒருவர் 101 லிட்டர் மினரல் வாட்டரை ஆர்டர் செய்திருக்கிறார். இருப்பதிலே அதிகமாக மேகி பாக்கெட்டுகள்தான் அதிகம் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. நள்ளிரவுக்கு பிறகுதான் அதிகம் டெலிவரி ஆகியுள்ளது. 3.2 கோடி மேகி பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக பிளின்கட் தெரிவித்திருக்கிறது.
இதையெல்லாம் விட விநோதமாக மற்றொருவர் இந்த ஆண்டில் 4,832 குளியல் சோப்புகளை ஆர்டர் செய்திருக்கிறார். மேகி பாக்கெட்டுகளுக்கு அடுத்த இடத்தில் ஐஸ்கரீம்கள் இருக்கின்றன. 1.22 கோடி ஐஸ்கிரீம்கள் இந்த ஆண்டு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் மற்றொரு ஆச்சரியமான ஆர்டர் அரிசிதான். ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 46.6 கி.கி என்கிற விகிதத்தில் ஆண்டுக்கு சுமார் 17,009 கி.கி அரிசியை ஆர்டர் செய்திருக்கிறார். மற்றொரு நபர் 972 மொபைல் சார்ஜர்களை ஆர்டர் செய்திருக்கிறார். மிகவும் வித்தியாசமாக மற்றொரு நபர் ஒரே மாதத்தில் 38 உள்ளாடைகளை ஆர்டர் செய்திருக்கிறார். அதுவும் ஒரே சைசில்.
ஆக இந்த ஆண்டு யாருக்கு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, பிளின்கிட் டெலிவரி நிறுவனத்திற்கு மிகவும் ஃபன்னாக இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. என்ன மக்களே நீங்களும் ஆர்டர் செய்ய ரெடியா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications