21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்?
சென்னை: தமிழக அரசியல் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வித்தியாசமான திருப்பத்தை எதிர்நோக்கி நகர்கிறது.. அதிலும் 21 முக்கிய தொகுதிகளில், அசல் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களின் பாரம்பரிய சின்னங்களான உதயசூரியன் மற்றும் இரட்டை இலையை போட்டியிடாமல் விட்டு, மாற்று கட்சிகளுக்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.. இது தமிழக அரசியலின் புதிய “ஹாட் ஸ்பாட்” ஆகும்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 பெரும் துருவங்கள், தங்களின் பாரம்பரிய அடையாளங்களான உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்களின்றி 21 தொகுதிகளில் களம் காண்கின்றன. கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதிகள், தற்போது தமிழக அரசியலின் கவனத்தையும் பெற்று வருகின்றன..

உதயசூரியன், இரட்டை இலை
தமிழகத்தின் தேர்தல் வரலாறு என்பது சின்னங்களோடு பின்னிப் பிணைந்தது. பல தலைமுறைகளாக உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களித்துப் பழகிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்காளர்களுக்கு, வாக்குச் சீட்டில் இந்த 2 சின்னங்களும் இல்லாதது ஒருவித உளவியல் இடைவெளியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது..
இந்த 21 தொகுதிகளில் பிரதானக் கட்சிகளின் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இது சிறிய கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் ஒரு எதிர்பாராத சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளில், இந்தச் சின்னங்களின் மறைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தவெக, நாம் தமிழர் கட்சி
இந்த அரசியல் வெற்றிடத்தை தான் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள திட்டமிட்டு வருகின்றதாம் தவெகவும், சீமானின் கட்சியும்.. இந்த 2 சக்திகளும் மும்முரமாக களத்தில் வெற்றிக்காக திட்டமிட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, நடிகர் விஜய்யின் பிம்பம் மற்றும் இளைஞர்களின் ஆதரவு ஆகியவை அந்த கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பாரம்பரிய அரசியலில் சலிப்படைந்தவர்கள் டிவிஜே-வை ஒரு மாற்றாகக் கருத வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கடந்த 10 வருட காலமாகவே தனித்து நின்று தங்களின் வாக்கு வங்கியை நிலைநிறுத்தியுள்ளது. மாற்று அரசியல் பேசும் இந்த இரு கட்சிகளுக்கும், பிரதானச் சின்னங்கள் இல்லாத இந்தத் தொகுதிகள் ஒரு வரப்பிரசாதமாகும்.
ஏகப்பட்ட சவால்கள்
இரட்டை இலை, உதயசூரியன் இல்லாத இந்த தொகுதிகளில் நிலவும் மிகப்பெரிய சேலஞ்ச் என்னவென்றால், திராவிடக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எந்தளவுக்கு உண்மையாக வேலை செய்வார்கள் என்பதுதான். சொந்தச் சின்னம் இல்லாதபோது தொண்டர்களிடையே ஏற்படும் சுணக்கம், மாற்று சக்திகளுக்குக் கதவைத் திறந்துவிடக்கூடும்.
ஊழல் எதிர்ப்பு, நிர்வாக மாற்றம் மற்றும் புதிய முகம் போன்ற கோஷங்கள் இந்த த்தொகுதிகளில் வசிக்கும் நடுநிலை வாக்காளர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோஷியல் மீடியா பிரச்சாரம் மற்றும் நேரடித் தொடர்புகள் மூலம் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இந்த வாய்ப்பை பயன்படுத்த இப்போதே முனைப்பு காட்டுகிறார்களாம். குறிப்பாக, பாரம்பரிய வாக்கு வங்கி சிதறும்போது, அது நேரடியாக இந்த மாற்று சக்திகளின் கணக்கில் சேரக்கூடும் என்பதே தற்போதைய அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
யாருக்கு வெற்றி?
2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் இருமுனை அரசியல் கட்டமைப்பைத் தகர்க்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உதயசூரியனும் இரட்டை இலையும் இல்லாத இந்த 21 தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி அல்லது வாக்குகளின் சதவீதம், வரும் காலங்களில் தமிழகத்தின் 'மூன்றாவது பெரிய சக்தி' யார் என்பதைத் தீர்மானிக்கும். வாக்கு எண்ணிக்கை அன்று, இந்தத் தொகுதிகளின் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!
-
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி? -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை -
சொந்தமாக விவசாய நிலம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு என்ன? மனைவி பெயரில் எவ்வளவு உள்ளது? -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! மகனுக்கு பதிலாக அமைச்சர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார் -
யார் யாருக்கோ சீட்? தொண்டர்களைப் புறக்கணிக்கும் திருமா? - விசிகவில் வெடிக்கும் குழப்பம்! -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
ராமதாஸுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்கிரவாண்டி வேட்பாளர்! அன்புமணி அணிக்கு டைவ் அடித்ததால் நீக்கம்!












Click it and Unblock the Notifications