Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து.. அடித்துச் சொல்வது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்! விளாசும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுர்வேத மருத்துவத் துறையில் கோமியம்தான் அமிர்த நீர் என்று அழைக்கப்படுகிறது; ஆயுர்வேத துறையில் கோமியம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது; என் உணவு என் உரிமை என்கிறார்கள்... என் மருந்து என் உரிமை என்பதை ஏற்க மறுக்கிறார்களே என தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியதாவது: ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சிப் பூர்வமாக மாட்டின் சிறுநீரான கோமியம், அமிர்த நீர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என சொல்கின்றனர். சங்க இலக்கியங்களில் மாட்டுச் சாணத்தால்தான் வீடுகளின் முற்றத்தில் பூசி இருந்தனர். சாணத்தின் நடுவே பூவரசம் பூவை வைத்து வழிபாடு செய்கிறவர்கள்.

cow urine tamilisai soundararajan

மாட்டு சிறுநீரில் - கோமியத்தில் கிருமி நாசினி

மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருந்ததால்தான் முன்னோர்கள் இப்படிச் செய்தனர். அப்ப மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிற போது மாட்டு சிறுநீரான கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. எல்லா மிருகங்களையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இது ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை எடுத்துக் கொள்கின்றனர். ஆகையால் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறிய கருத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது; இது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் மருந்துதான் கோமியம்

ஆயுர்வேதத்தில் 80 வகையான நோய்களுக்கு கோமியத்தை பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி குறிப்பிட்ட காய்ச்சல் கூட அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கக் கூடியவர் சும்மா சொல்லிவிடுவாரா?

என் மருந்து என் உரிமை

என் உணவு என் உரிமை என நீங்கள் பேசுகிறீர்களே.. என் மருந்து என் உரிமை என நாங்கள் சொல்கிறோம்.. விஞ்ஞானப்பூர்வமாக மருந்து என நாங்கள் சொல்லும்போது ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? இந்திய பண்பாட்டு முறையில் நாங்கள் எதனை குறிப்பிட்டாலும் அதனை ஏற்க முடியாது என்கிறார்கள். கோமியம் பதப்படுத்தப்படுகிறது.. பஞ்ச கவ்யம் அமேசானில் கூட விற்பனையாகிறது. நான் அலோபதி மருத்துவர்தான். ஆனால் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்தாக இருக்கிறது என நான் கூறுகிறேன். இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழிசைக்கு செல்வப் பெருந்தகை எதிர்ப்பு

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப் பெருந்தகை தமது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.

வடக்கே போல் மாட்டரசியல் இங்கே வேண்டாம்

ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+