17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ
28 வயது பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் சவிதா என்ற வசந்தி. இவருக்கு 28 வயதாகிறது. கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.
முதல் புருஷனுடன் சண்டை போட்டுவிட்டு பிரிந்து வந்துவிட்டார். அதனால் 2-வது புருஷனுடன் வாழ்கிறார். அவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். அதனால் சென்னையில் 3 குழந்தைகளை வைத்து கொண்டு வசந்தி தனியாக வாழ்ந்து வந்தார்.

17 வயது சிறுவன்
ஒருநாள் சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை பார்க்க சென்றார் வசந்தி. அப்போதுதான் 17 வயசு பையனை முதன்முதலாக பார்த்தார். அந்த நிமிடத்திலேயே 3 குழந்தைகளை பெற்ற வசந்திக்கு சிறுவன் மேல் லவ் வந்துவிட்டது.

புருஷனை கைவிட்டார்
இதையடுத்து அவனிடம் நெருங்கி தவறான முறையில் பேசியும் நடந்து கொள்ள ஆரம்பித்தார். சிறுவன் கிடைத்த ஜோரில் 2-வது புருஷனையும் கைவிட்டார் வசந்தி. 3 குழந்தைகளையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டார்.

காதில் வாங்கவில்லை
பையனின் நடவடிக்கைகளை கவனித்த பெற்றோர் உஷாரானார்கள். கண்டித்து அறிவுரை சொன்னார்கள். ஆனாலும் இருவருமே அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவனை வீட்டை விட்டுவெளியேற செய்து தன்னுடன் கூட்டிகொண்டு ஊர் ஊராக சுற்றினார் வசந்தி. அப்போதுதான் பெற்றோர் மகனை காணோம் என்றும் வசந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

போக்சோ பாய்ந்தது
இதையடுத்து போலீசாரும் 2 பேரையும் ஊர் ஊராக தேடி வந்து ஒருவழியாக கண்டு பிடித்துவிட்டனர். வெளியூரில் ஜாலியாக சுற்றி கொண்டிருந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ், வசந்தியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

புழல் சிறை
சென்னையில் பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 2 கணவன்கள், 3 குழந்தைகள் இருந்தும் 17 வயது சிறுவனை தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்ட வசந்தி இப்போது புழல் ஜெயிலில் உள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications