சென்னையில் நாய் - பூனை வளர்த்தால் ரூ.5,000 ‛ஃபைன்'.. வீடு வீடாக வரும் அதிகாரிகள்! உடனே இதை செய்யுங்க
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய் - பூனைகளை வீட்டில் வளர்த்தால் அதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை நவம்பர் 24ம் தேதிக்குள் பெற வேண்டும். இல்லாவிட்டால் வீடு வீடாக வரும் அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர். அதேபோல் நாய்களை வெளியே அழைத்து செல்வோர் கழுத்து பட்டையுடன் கூட்டி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ரூ.500 ‛ஃபைன்' விதிப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெருநாய் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அதேவேளையில் இன்னொரு தரப்போ, தெருநாய்களை சுதந்திரமாக உலவ விட வேண்டும். தெருநாய்களை சீண்டினால் தான் கடிக்கும். சாதாரணமாக கடந்து சென்றால் ஒன்றும் செய்யாது என்று கூறி வருகின்றனர். இப்படி விவாதங்கள் போய் கொண்டிருக்கும் சூழலில் தான்
சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மாதம் வரை காலஅவகசாம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதிக்குள் நாய், பூனை வளர்ப்பதற்கு லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்து லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர்.
அதேபோல் வீட்டில் வளர்க்கும் நாய்களை பொது இடங்களான பூங்கா, சாலைகளுக்கு அழைத்து வரும்பபோது அதன் கழுத்தில் பட்டை (Leash) அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.500அபராதத்தை அந்தந்த வார்டுகளின் சுகாதார இன்ஸ்பெக்டர் வசூலிப்பார். அதேபோல் பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது நாய்கள் அசுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது. மீறி நாய்கள் அசுத்தம் செய்தால் அதனை அகற்ற வேண்டிய பெறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு உள்ளது என்று தீர்மானம் தெரிவித்துள்ளது.
நாய் மற்றும் பூனைகளுக்கு லைசென்ஸ் பெற உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செல்லபிராணியின் போட்டோ மற்றும் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றி ரூ.50 செலவில் லைசென்ஸ் பெற்று கொள்ள முடியும். இந்த விண்ணப்பத்தை மண்ட கால்நடை அதிகாரி ஆய்வு செய்து. உரிமம் வழங்குவார்.
தற்போது வரை 9,579 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை எடுத்து கொண்டால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏராளமானவர்கள் இன்னும் லைசென்ஸ் பெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும். மேலும் நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் உள்பட மொத்தம் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications