சென்னையில் துரைப்பாக்கம் ஓஎம்ஆர் ஏரியாவா நீங்க? நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. புதுரூட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது? என்பது தொடர்பான விவரம் வருமாறு:

சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் முக்கிய சாலைகளில் தினமும் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக துரைப்பாக்கம் ஓஎம்ஆர் ஏரியாக்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அதனை சுற்றிய இடங்களிலும் பீக்ஹவர்ஸ்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது.

Traffic changes

இந்நிலையில் தான் ராஜீவ் சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும் 23.09.2026 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

1. மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கீதம் உணவகம் அருகே யூ-டர்ன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று, அங்கு யூ டர்ன் செய்து சோழிங்கநல்லூர் நோக்கி செல்ல வேண்டும்.

2.அதேபோல் 200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவரம் அருகே யூடர்ன் செய்ய அனுமதி இல்லை. அந்த வானங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி சென்று யூடர்ன் செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும்.

3. கந்தன்சாவடியிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் நோக்கி செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் (World Trade Centre)அருகே யூடர்ன் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று யூடர்ன் செய்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் நோக்கி செல்ல வேண்டும்.

4.பெருங்குடி மற்றும் ஸ்ரீவரம் பகுதியிலிருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் கீதம் உணவகம் அருகே யூடர்ன் செய்து 200 அடி ரேடியல் சாலைக்கு செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+