உங்க வயசு 59! உங்களுக்கு நான் அண்ணனா? அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்! அமைச்சர் கணேசனை கலாய்த்த உதயநிதி!
அமைச்சர் கணேசனை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: அமைச்சர் கணேசன் தன்னை ''அண்ணன் அண்ணன்'' என்று அழைத்ததை பார்த்து தாம் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டதாக கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அதே போல் தாம் தீவிர அரசியலுக்கு வந்த மாதம் ஜூலை மாதம் தான் என்றும் அமைச்சர் கணேசன் மார்ச் மாதம் என்று குறிப்பிட்டது தவறு எனவும் மேடையிலேயே உதயநிதி போட்டுடைத்தார்.
இதைக் கேட்ட மாணவ, மாணவிகள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியதால் விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

உதயநிதி ஸ்டாலின்
கருணாநிதியை போலவே உதயநிதி ஸ்டாலினும் தாம் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்ளக் கூடியவர். டைமிங்காக இவர் பேசும் பேச்சுக்கள் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கி வைத்து பேசிய அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை கலாய்த்தார்.

அமைச்சர் கணேசன்
அமைச்சர் கணேசன் பேசும் போது தன்னை ''அண்ணன் அண்ணன்'' என்று அழைத்ததை பார்த்து தாம் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டதாக கூறிய உதயநிதி, தனது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் கணேசனிடம் உங்களுக்கு எத்தனை வயது என தாம் கேட்ட போது 59 வயது என அவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் 59 வயதாகும் அமைச்சர் கணேசன் தன்னை விட வயதில் குறைந்த என்னை என் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக அப்படி அழைப்பதாக தெரிவித்தார் என உதயநிதி கூறினார்.

அரங்கத்தில் சிரிப்பலை
சரி இதோடு விட்டுவிடுவார் என்று பார்த்தால் அடுத்த விவகாரம் ஒன்றை போட்டுடைத்து அமைச்சருக்கு பல்பு கொடுத்தார். தாம் தீவிர அரசியலுக்கு வந்த மாதம் ஜூலை மாதம் தான் என்றும் அமைச்சர் கணேசன் மார்ச் மாதம் என்று குறிப்பிட்டது தவறு எனவும் உதயநிதி தெரிவித்தார். சிரித்துக் கொண்டே போகிற போக்கில் உதயநிதி இவ்வாறு கலாய்த்ததை கேட்ட மாணவ, மாணவிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

கட்சி நிகழ்ச்சிகள்
இதேபோல் தான் கட்சி நிகழ்ச்சிகளிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் எழுதி வைத்துக் கொண்டு பேப்பரை பார்த்து பேசாமல், ஆன் தி ஸ்பாட்டில் நகைச்சுவை உணர்வுடன் டைமிங்காக பேசி கைத்தட்டல்களை அள்ளி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications