கர்நாடகாவில் ஒரே நாளில்.. இன்று வேலை இழக்க போகும் 2 லட்சம் பேர்.. கதறும் இளைஞர்கள்.. என்னாச்சு?
சென்னை: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு பின்னடைவாக மாறி உள்ளது. இதனால் அந்த வேலைகளை நம்பி இருக்கும் 2 லட்சம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பைக் டாக்ஸி ஆபரேட்டர்களுக்கு விதித்த தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராபிடோ, ஓலா மற்றும் ஊபர் போன்ற தளங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாநிலத்தின் அனைத்து பைக் டாக்ஸி நடவடிக்கைகளையும் இடைநிறுத்திய முந்தைய நீதிபதி அமர்வு வழங்கிய உத்தரவை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்தது.

வழக்கு ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஜூன் 20-க்குள் பதில்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவரை, ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு அமலில் இருக்கும். தலைமை நீதிபதி கமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி ஸ்ரீனிவாஸ் ஹரீஷ் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பைக் டாக்சிகளை அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளார்.
பைக் டாக்ஸி கொள்கையை உருவாக்க வேண்டாம் என்ற மாநில அரசும் தெளிவான முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தற்காலிக நிவாரணம் வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாநில அரசின் கொள்கை முடிவு
"பைக் டாக்ஸி கொள்கையை உருவாக்க வேண்டாம் என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அத்தகைய கட்டமைப்பு இல்லாமல், எங்களால் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது," என்று நீதிபதி ராவ் கூறினார். கொள்கை வரைவு நடந்து கொண்டிருந்தால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படலாம், ஆனால் இங்கே கொள்கை விதிகளை உருவாக்க மாநில அரசே விரும்பவில்லை. நாங்கள் எப்படி இதில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்
மாநில அளவிலான விதிமுறைகள் இல்லாத நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மனுதாரர்களான ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ தரப்பினர் வாதிட்டனர். மத்திய அரசின் சில வழிகாட்டுதல்கள் இரு சக்கர வாகனங்களை ஒப்பந்த வண்டிகளாக பயன்படுத்த அனுமதிக்கின்றன.
இருப்பினும், மத்திய அறிவுறுத்தல்கள் மாநிலத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நாங்கள் இதில் மாநில அரசை வறுபுறுத்த முடியாது. இதனால், மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில் நாங்கள் அனுமதிகளை வழங்க முடியாது. பைக் டாக்ஸி கொள்கையை உருவாக்க வேண்டாம் என்ற மாநில அரசும் தெளிவான முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக நீதிமன்றம் தற்காலிக நிவாரணம் வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரே நாளில் பலருக்கு வேலை போகும்
இதனால் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு பின்னடைவாக மாறி உள்ளது. இதனால் அந்த வேலைகளை நம்பி இருக்கும் 2 லட்சம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவோடு இந்த தடை அமலாவதால் இன்று முதல் பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
கர்நாடகா முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்கள் பைக் டாக்ஸி சேவைகளை தங்கள் முக்கிய வருமானத்திற்காக நம்பியுள்ளனர். ராபிடோ ரைடர்ஸில் சுமார் 75 சதவீதம் பேர் இந்த தளம் மூலம் தங்கள் முக்கிய வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறார்கள், இதன் மூலம் சராசரி மாத வருமானம் ரூ.35,000 ஆக உள்ளது. பெங்களூரில் மட்டும் ரைடர்ஸுக்கு ரூ.700 கோடிக்கு மேல் வருமானம் செலுத்தியுள்ளதுடன், ரூ.100 கோடி ஜிஎஸ்டி செலுத்தியுள்ளது. இப்படி சேவைகளை நிறுத்துவது மாநிலம் முழுவதும் உள்ள கிக் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் என்று ராபிடோ எச்சரித்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications