திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் ''கலகம்''! முதல்வர் நிம்மதிக்கு உலை வைக்கும் உட்கட்சி பஞ்சாயத்து!
சென்னை: திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் உட்கட்சி பஞ்சாயத்தும், கோஷ்டிப்பூசல்களும் அதிகரித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கட்சி பஞ்சாயத்து இப்போது ஊருக்கு ஒரு கோஷ்டிப் பூசல் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. குறிப்பாக நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் நிலவும் பனிப்போர் தான் முதலமைச்சர் ஸ்டாலினை நிம்மதி இழக்க வைத்துள்ளது. நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கச்சைக் கட்டி நிற்பது தான் இப்போது ஹாட் டாபிக்.

அதேபோல் தேனியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தத்தால் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று கூட தாமரைக்குளம் திமுக நிர்வாகிகள் எடப்பாடியை சந்திக்க சேலம் புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்ட திமுகவை பொறுத்தவரை மேயர் மகேஷ், அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் என மூன்று டீம்கள் முட்டி மோதி அரசியல் செய்கின்றன.
அதேபோல் விழுப்புரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை நிற்க வைத்து மறித்து கட்சிக்காரர்கள் கேள்வி கேட்ட நிகழ்வுகள் எல்லாம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர்களான பிரகாஷுக்கும், பர்கூர் மதியழகனுக்கும் எதிராக சத்தமின்றி ஒரு யுத்தத்தை தொடங்கியிருகிறார்கள் உடன் பிறப்புகள். ஒரு சிலர் கட்சியைவிட்டு வெளியேறி அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.
கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இதேபோல் தான் தென்காசி, வேலூர், ஈரோடு, குறிப்பாக கோவை, உள்ளிட்ட ஊர்களிலும் திமுக நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமையில்லாத நிலை காணப்படுகிறது. உட்கட்சி பஞ்சாயத்தை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் அன்பகம் கலையும், ஆர்.எஸ்.பாரதியும் தான் கவனித்துக் கொள்கிறார்கள். இதனிடையே உட்கட்சி பிரச்சனைகளை முதலமைச்சர் ஸ்டாலினோ, அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ நேரடியாக தலையிட்டு பேசினால் தான் இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என்பது மூத்த முன்னோடிகளின் கருத்தாக உள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications