அட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல!!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதன் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

இணையத்தில் வெளியீடு
இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒருவர் கூட தேர்ச்சியில்லை
தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் 682 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.

3 கல்லூரிகள் மட்டும்
59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூயில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.

அதிர்ச்சி
ஏற்கனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த தேர்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications