14 மாவட்டங்கள் குறி.. நாளை கொட்டும் கனமழை! உங்கள் ஊர் இருக்கா? சென்னை நிலவரம் என்ன?வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த முக்கிய அப்டேட்டும் வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மழை பெய்வதால் ஓரளவு வெப்பம் தணிந்துள்ளது. இருப்பினும் கூட கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரலில் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் குறித்தும், மழை, வெயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தென்மண்டல தலைவருமான மண்டல ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
14 மாவட்டங்களில் மழை: தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சலேம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 4 நாள் எப்படி: அதேபோல் வரும் 26 முதல் 27 வரையிலான தேதிகளில் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 28 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எங்கு அதிகம்: மேலும் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, நீலகிரி மாட்டம் அடார் எஸ்டேட், குன்னூர், கோத்தகிரி விருதுநகர்ம மாவட்டம் வத்திராயிருப்பு பகதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுதவிர தமிழ்நாட்டின் பல இடங்களில் குறிப்பிடும் அளவுக்கு மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கேரளா கடலோர பகுதகிளில் சூறாவளிக்காற்று மணிக்க 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications